இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
இதே நாளில் அன்று

ஏப்ரல் 17, 1975
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 1888, செப்., 5ல் பிறந்தார். முதுகலை பட்டம் பெற்ற இவர், சென்னை பல்கலை உட்பட பல பல்கலையில், தத்துவ பேராசிரியராக பணியாற்றினார்.சுதந்திர போராட்டத்தில் முழுமையாக ஈடுபடாவிட்டாலும், ஆதரித்தவர்களுள் ஒருவராக விளங்கினார். 1938ல், அவருக்கு, 'சர்' பட்டம் கொடுத்து, பிரிட்டிஷ் அரசு கவுரவித்தது. சென்னை மாகாண முதல்வராக இருந்த ராஜாஜி, உயர்நிலைப் பள்ளிகளில், ஹிந்தி மொழிப்பாடம் கட்டாயம் என, அறிவித்தார். அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த, சென்னை மாகாண, காங்., தலைவர்களில் ஒருவராக, ராதாகிருஷ்ணன் திகழ்ந்தார். நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியாகவும் பணியாற்றினார்.நாட்டின் உயரிய, 'பாரத ரத்னா' விருது பெற்றவர். இவர் பிறந்த தினமான, செப்., 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 1975, ஏப்., 17ல் காலமானார். அவர், இறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
17-ஏப்-201808:51:42 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> நான் என்றும் வணங்கும் நல்ல மனிதர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X