தடை செய்யப்பட்டபோதை பொருட்கள் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடை செய்யப்பட்டபோதை பொருட்கள் பறிமுதல்

Added : ஏப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், 5,000 ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கருணாநிதி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆதிகோபாலகிருஷ்ணன், சிவராஜ், அருண் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர், கோத்தகிரி நகரில், பேக்கரிகள், பெட்டி கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, ராம்சந்த் பகுதியில் பெட்டிக்கடைகளில், தடை செய்யப்பட்ட 'பான்பராக், ஹான்ஸ், புகையிலை' உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவது தெரியவந்தது. தொடர்ந்து, 5,000 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.அலுவலர்கள் கூறுகையில், 'போதை பொருட்கள்; காலாவதியான பொருட்களை விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கலெக்டர் வெளியிட்டுள்ள, 94440 42322 என்ற மொபைல் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு, தகவல் அளித்தால், 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை