எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டர் சிக்கினார்| Dinamalar

எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டர் சிக்கினார்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எய்ம்ஸ் மருத்துவமனையில் போலி டாக்டர் சிக்கினார்

புதுடில்லி, டில்லியில் செயல்படும், எய்ம்ஸ் மருத்துவமனை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, 2,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள், 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில், கழுத்தில், 'ஸ்டெதஸ்கோப்' அணிந்த நிலையில், ஒரு இளைஞர், மருத்துவமனைக்குள் சுற்றித் திரிந்தார்.
அங்கிருந்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.
இதையடுத்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் அவர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த, அடனன் கவுர் ராம் என்பதும், 10ம் வகுப்பு வரை படித்தவர் என்பதும் தெரிய வந்தது.
ரத்தப் புற்றுநோய்க்காக, தன் சகோதரி, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும், அவருக்கு, விரைந்து சிகிச்சை அளிப்பதற்காக, டாக்டர் போல நடித்து வந்ததாகவும், கவுர் ராம் கூறினார். கடும் பாதுகாப்பை மீறி, ஒரு இளைஞர், மாதக்கணக்கில், டாக்டர் போல நடித்திருப்பது, எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj Pu - mumbai,இந்தியா
17-ஏப்-201815:31:01 IST Report Abuse
Raj Pu மத்திய அரசு கட்டுப்பாட்டில் இது நடப்பது சகஜம், ரெட்டியிடம் பிடிபட்ட புது நோட்டுக்கள் எங்கிருந்து வந்தது என்பதே தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201805:18:20 IST Report Abuse
மைதிலி நிஜத்தில் சினிமா போல வசூல் ராஜா .உயிர்களுடன் விளையாடும் இவர் போன்றோர் ஆபத்தானவர்கள்
Rate this:
Share this comment
Cancel
ArulKrish -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201804:40:13 IST Report Abuse
ArulKrish more investigation required anout How many Operations he did? On the name of treatment how many patients he touched and saw nude? more enquiry required.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X