ராணுவ கண்காட்சி வெற்றி: நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராணுவ கண்காட்சி வெற்றி
நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி

சென்னை: ராணுவ கண்காட்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும், ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், நன்றி தெரிவித்துள்ளார்.

ராணுவ கண்காட்சி, நிர்மலா

ராணுவ அமைச்சகம் சார்பில், ஏப்., 11 முதல், 14ம் தேதி வரை, 'டிபெக்ஸ்போ - 18' என்ற ராணுவ கண்காட்சி, சென்னை அருகே உள்ள, திருவிடந்தையில் நடைபெற்றது. இதில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்

சேர்ந்த, 701 நிறுவனங்கள் பங்கேற்றன. பிரதமர் நரேந்திர மோடி, முறைப்படி திறந்து வைத்து பார்வைஇட்டார்.பொது மக்களின் பார்வைக்காக, 14ம் தேதி,கண்காட்சி வைக்கப்பட்டு, அன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், கண்காட்சியின் அமோக வெற்றிக்கு உதவியாக இருந்தவர்களுக்கு, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன், 'டுவிட்டர்' பக்கத்தில், நன்றி தெரிவித்துஉள்ளார்.

மக்கள் சேவை


அதில், ஒத்துழைப்பு அளித்த, முதல்வர்பழனிசாமிக்கும், அவரது குழுவினருக்கும் நன்றி. அவருக்கு நன்றி தெரிவிக்க, மொபைல் போனில் அழைத்தபோது, 'நான் விமானத்தில் இருக்கிறேன்; பின்னர் பேசுகிறேன்'

Advertisement

என்றார்.மேலும், தமிழக தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அவரது குழுவுக்கும் நன்றி. கண்காட்சிக்கு முழு ஆதரவு அளித்த, பத்திரிகையாளர்களுக்கும் நன்றி.மேலும், பல கல்லுாரிகளிலிருந்து, மக்கள் சேவைக்காக, தன்னார்வலராக பணியாற்றிய இளைஞர்கள் அனைவருக்கும் நன்றி.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.Advertisement

வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
poonguzhali - singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201821:23:17 IST Report Abuse

poonguzhaliராணுவ அமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள். தமிழகத்தில் தம் உதவி வேண்டும் என்று எண்ணாத பலர் இருந்த போதும். பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்த்தமைக்கு நன்றிகள் பல. உங்கள் மொழியும் திறமும் மென்மேலும் நாட்டின் நலனை பெருக்கிட பிராத்திக்கிறேன். நீடுழி வாழ்க.

Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
17-ஏப்-201818:28:28 IST Report Abuse

Sathish வீட்டில் தன் பிள்ளை பசிக்கு அழுகும் போது தொலைக்காட்சியில் சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் அம்மாவினால் குழந்தையின் பசியை தீர்க்க முடியாது. ஒன்று அந்த பிள்ளை பசியில் மயங்கி விடும் அல்லது வேறு யாரவது வந்து சோறு ஊட்டவேண்டும். அந்த குழந்தை வேறு யாருமல்ல தமிழ்நாடு தான்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஏப்-201817:44:33 IST Report Abuse

Endrum Indianகாவிரி போராட்டம் வெற்றி என்று ஸ்டாலின் கூட தான் சொன்னார்?? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டதா இல்லையே?? கண்காட்சி வெற்றி என்றால் என்ன? என்ன வெற்றி? வெறும் கண்காட்சி நடந்தது வெற்றியா? ஏதேனும் ஆர்டர் வெளிநாட்டிலிருந்து கிடைத்ததா? எவ்வளவு ஆயிரம் கோடிக்கு என்று சொல்லுங்கள், நாங்கள் கண்காட்சி வெற்றியா இல்லை தோல்வியா என்று சொல்கின்றோம்.

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)