மாஜி செயலர் மீது அமைச்சர்கள் அடுத்தடுத்து புகார் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மாஜி செயலர் மீது அமைச்சர்கள் அடுத்தடுத்து புகார்

சென்னை,: அமைச்சர் தங்கமணியை தொடர்ந்து, மந்திரி ஜெயகுமாரும், நேற்று, முன்னாள் தலைமை செயலர், ராம மோகன் ராவ் மீது புகார் தெரிவித்து உள்ளதால், அவர் கைது செய்யப்படலாம் என, தெரிகிறது.'யாரையோ திருப்திபடுத்த, பொய் தகவல்களை கூறும், ராமமோகன ராவை கைது செய்து, விசாரிக்க வேண்டும்' என, ஜெயகுமார் பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளார்.

மாஜி செயலர் மீது அமைச்சர்கள் அடுத்தடுத்து புகார்

வலுக்கட்டாயமாக



சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா, மாணவியரிடம் பேசிய, 'ஆடியோ' பதிவை, நானும் கேட்டேன். பேராசிரியராக இருந்தும், மாணவியரை தவறான வழிக்கு, வலுக்கட்டாயமாக அழைத்து செல்வது, கண்டனத்திற்குஉரியது. இதுபோன்ற கருப்பு ஆடுகள் களையெடுக்கப்பட வேண்டும்; அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி.சென்னை, அப்பல்லோ மருத்துவ மனையில், ஜெயலலிதா அனுமதிக்கப்

பட்டிருந்த போது, அவரை, வெளிநாட்டிற்கு அழைத்து சென்று, சிகிச்சை அளிப்பது தொடர்பாக யோசனை கூறியதாக, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில், ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார்.அது பொய் என, தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் மறுப்பு தெரிவித்துஉள்ளனர்.

தெளிவாக கூற வேண்டும்



ராவ், தலைமை செயலராக இருந்தபோது, அதிகாரி போல நடந்து கொள்ளாமல், அரசியல் வாதி போல செயல்பட்டார். அவர், யாரையோ திருப்திப்படுத்த, இப்படி பேசுகிறார்.ஆறுமுகசாமி கமிஷனுக்கு அதிகாரம் இருந்தால், அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.மீன்பிடி தடை காலம், ஜூன், 15 வரை உள்ளது. இதனால், 1.60 லட்சம் குடும்பங்களுக்கு, 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.ஒவ்வொரு குடும்பத்திற்கும், மாதம், 5,000 ரூபாய் வழங்கப்படும்.மத்திய அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன், பொத்தாம் பொதுவாக பேசுகிறார். தூத்துக்குடி, 'ஸ்டெர்லைட்' ஆலை விரிவாக்கத்திற்கு, லஞ்சம் வாங்கியது யார், எப்போது வாங்கினர்,யாரிடம் வாங்கினர் என, அவர் தெளிவாக கூற வேண்டும்; தெருவில் செல்பவர் போல் பேசக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

பாதுகாப்பான நகரம்!''நாட்டிலேயே, சென்னை நகரம் தான், பெண்களுக்கு பாதுகாப்பான நகரம்,'' என, அமைச்சர் சரோஜா

Advertisement

தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில், 10 லட்சம் பெண்கள் பயன் அடைந்துள்ளனர். இதில், 5.47 லட்சம் பேர் பட்டதாரிகள்; 4.37 லட்சம் பேர், 10 மற்றும் பிளஸ் 2 படித்தவர்கள்.இத்திட்டத்திற்கு, இதுவரை, 4,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,200 கோடி ரூபாய் தங்கத்திற்கும், 3,300 கோடி ரூபாய் நிதியுதவியாகவும் வழங்கப்பட்டுள்ளது.பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் மாணவ, மாணவியர், தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறோம்.நாட்டில் உள்ள மாநகரங்களில், சென்னை மற்றும் கோவை தான், பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என, தேசிய குற்ற ஆவண காப்பகம் சான்று வழங்கி உள்ளது. தமிழகத்தில், பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்பதற்கு, இதுவே அடையாளம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suresh - covai,இந்தியா
17-ஏப்-201818:34:27 IST Report Abuse

sureshஇந்த கூன்பாண்டியர்கள் தங்கள் அரசியல் பிழைப்புக்காக சொன்ன பொய்தான் ஜெயலலிதா வீட்டிலேயே அடிபட்டு தான் மருத்துவமனை வந்தார் என்பது. சசிகலா தான் J.Jவை கொன்னது என்று சொன்னது. இப்போ இவர்கள் சொன்னது எல்லாம் பொய் என்பது விசாரணையில் தெரிய வருகிறது. இப்ப இந்த கூன் பாண்டியர்களை தமிழர்கள் என்ன செய்யலாம் ? கூறுங்கள் வாசகர்களே.

Rate this:
ram - chennai,இந்தியா
17-ஏப்-201818:13:05 IST Report Abuse

ramயாரையோ திருப்திபடுத்த, பொய் தகவல்களை கூறும், ராமமோகன ராவை கைது செய்து, விசாரிக்க வேண்டும்

Rate this:
Sundaram - Thanjavur,இந்தியா
17-ஏப்-201817:54:06 IST Report Abuse

Sundaramராமமோகன் ராவ் கூறும் கருத்து உண்மைக்கு புறம்பானது

Rate this:
JANANI - chennai,இந்தியா
17-ஏப்-201817:46:49 IST Report Abuse

JANANIpoiyaana thagaval sonna pugar seiyya thaan seivaanga...

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
17-ஏப்-201815:36:01 IST Report Abuse

Raj Puராவ், தலைமை செயலராக இருந்தபோது, அதிகாரி போல நடந்து கொள்ளாமல், அரசியல் வாதி போல செயல்பட்டார்.// அன்றே அம்மாவிடம் கூறி இவர் கொட்டாததை கண்டிக்க தைரியம் இல்லாத, இவர் இன்று இதை இவர் கூறுவது இந்த விசாரணை கமிஷன் அமைத்த தங்கள் நோக்கம் நடக்காது என்ற பயத்தில் இருக்கலாம்

Rate this:
தலித் கறுப்பன் - chennai,இந்தியா
17-ஏப்-201813:51:08 IST Report Abuse

தலித் கறுப்பன் சீமான் கட்சிகாரர்களை தூக்கி உள்ள போட்டா தமிழ் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாய் இருப்பார்கள்.

Rate this:
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
17-ஏப்-201813:48:09 IST Report Abuse

Rajhoo Venkatesh.எவன் உண்மையை பேசுறான் எவன் பொய் பேசுறான் அந்த ஜெ ஜெ வுக்கே வெளிச்சம்.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஏப்-201811:19:42 IST Report Abuse

Kuppuswamykesavanஅப்படீன்னா, பொய் சாட்சி கேஸில் கைது நடக்குமோ?.

Rate this:
sam - Doha,கத்தார்
17-ஏப்-201809:46:05 IST Report Abuse

samஎது பொய் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். மக்கள் தக்க தருணத்தில் சரியான முடிவு எடுத்து பாடம் புகட்டுவார்கள்

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
17-ஏப்-201809:30:33 IST Report Abuse

balakrishnanஅது எப்படி அவரை கைது செய்ய முடியும், எதன் அடிப்படையில் கைது செய்வார்கள், அவர் கூறியுள்ள இடம் விசாரணை கமிஷனிடம், பிரச்சனை உங்களுக்குத்தான், நீங்கள் தான் அவர் சொல்வதை தவறு என்று நிரூபிக்க வேண்டும், அவர் அம்மாவிடம் வேலை செய்தவர், உங்களை பற்றி நன்கு அறிந்தவர், மத்திய அரசே சோதனை போட்டு, அவரை விட்டுவைத்துள்ளது

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement