In Mecca Masjid Blast Case, Judge Who Acquitted All 5 Accused Resigns | மெக்கா மசூதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேர் விடுதலை: போதிய சாட்சிகள் இல்லை என நீதிமன்றம் அறிவிப்பு Dinamalar
பதிவு செய்த நாள் :
விடுதலை!
மெக்கா மசூதி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 5 பேர்...
போதிய சாட்சிகள் இல்லை என நீதிமன்றம் அறிவிப்பு

பிரிக்கப்படாத ஆந்திர மாநில தலைநகர், ஐதராபாதில், 2007ல், மெக்கா மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரும், போதிய சாட்சிகள் இல்லாததால், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முன்னாள் தலைவர்களில், சுவாமி அஸீமானந்தும் ஒருவர்.

மெக்கா மசூதி, வழக்கு, விடுதலை, என்ஐஏ

கடந்த, 2007, மே, 18ல், ஐதராபாதில் உள்ள, வரலாற்று சிறப்பு வாய்ந்த, மெக்கா மசூதியில், வெள்ளி கிழமை பிரார்த்தனை நடந்தபோது, சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில், ஒன்பது பேர் உயிரிழந்தனர்; 58 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

குற்றப்பத்திரிகை


அதன் தொடர்ச்சியாக, கலவரங்கள் ஏற்பட்டதால், போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஐந்து பேர் கொல்லப்பட்டனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணைக்கு பின், 2007, ஜூனில், இந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக, ஹர்கத் உல் ஜிஹாத் இ - இஸ்லாமி என்ற அமைப்பைச் சேர்ந்த, 90 முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக, பிலால் என்பவன் செயல்பட்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டது. ஆனால், போதிய சாட்சிகள் இல்லாததால், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும், 2009ல், விடுவிக்கப்பட்டனர். இதன்பின், 2010ல், ஆர்.எஸ்.எஸ்., முன்னாள் தலைவரும்,

'அபினவ் பாரத்' அமைப்பைச் சேர்ந்தவருமான, சுவாமி அஸீமானந்த் உள்ளிட்டோருக்கு, மெக்கா மசூதி குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக, சி.பி.ஐ., கண்டறிந்தது. கடந்த, 2010, ஜூனில், ஆறு பேருக்கு எதிராக, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது.

தலைமறைவு



அதைத் தொடர்ந்து, 2011, ஏப்ரலில், இந்த வழக்கு, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.தீவிர விசாரணை நடத்திய, என்.ஐ.ஏ., 2013, ஜூனில், அஸீமானந்த், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த, தேவேந்தர் குப்தா, லோகேஷ் சர்மா, பரத்பாய், ராஜேந்தர் சவுத்ரி உட்பட, எட்டு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
வழக்கு விசாரணை நடந்து வந்த சமயத்தில், குற்றஞ்சாட்டப்பட்டோரில் ஒருவரான, சுனில் ஜோஷி, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். வழக்கில் தொடர்புடைய, ம.பி.,யைச் சேர்ந்த, சந்தீப் வி.டாங்கே, ராமசந்திர கல்சங்ரா ஆகிய இருவர், தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.இந்த வழக்கு தொடர்பாக, 226 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது. 411 ஆவணங்கள், ஐதராபாத், என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.இந்நிலையில், இந்த வழக்கின்
தீர்ப்பை, என்.ஐ.ஏ., நீதிமன்றம் நேற்று அறிவித்தது. அப்போது, போதிய சாட்சிகள் இல்லாததால், வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டுள்ள ஐந்து பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம்தீர்ப்பளித்தது.

விடுவிப்பு



இந்த வழக்கில் தொடர்புடைய, சுவாமி அஸீமானந்த், அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து, கடந்தாண்டு மார்ச்சில் விடுவிக்கப்பட்டார். கடந்த, 2006ல், மாலேகானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள், 2007ல், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்குகளிலும், அஸீமானந்த் மீது

Advertisement

குற்றஞ்சாட்டப்பட்டுஉள்ளது குறிப்பிடத்தக்கது.

மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய சாட்சிகள், 2014, ஜூன் மாதத்திற்கு பின், பிறழ் சாட்சிகளாக மாறினர். இந்த வழக்கை, தேசிய புலனாய்வு அமைப்பு, அதன் அரசியல் முதலாளிகள் உத்தரவுப்படி நடத்தியுள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவில்லை.அஸாதுதீன் ஒவைஸி தலைவர், ஏ.ஐ.எம்.ஐ.எம்.,

'ஹிந்து பயங்கரவாதம்' என்ற வாசகத்தை, காங்., உருவாக்கியது. மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து, காங்.,கின் முகமூடி கிழித்தெறியப்பட்டுள்ளது. ஹிந்து மதத்தை அவமதித்த, காங்., தலைவர், ராகுல், நள்ளிரவில், மெழுகுவர்த்தி ஏற்றி ஊர்வலம் செல்வாரா?ஸம்பித் பத்ரா, செய்தி தொடர்பாளர், பா.ஜ., -----

நீதிபதி ராஜினாமா


மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்கை, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ரவீந்திர ரெட்டி விசாரித்து வந்தார். குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும், விடுதலை செய்து, நேற்று காலை, நீதிபதி, ரவீந்திர ரெட்டி தீர்ப்பளித்தார். மாலையில், சொந்த காரணங்களுக்காக, நீதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக, அவர் அறிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக, சர்ச்சை எழுந்துள்ளது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விருமாண்டி - மதுரை,இந்தியா
17-ஏப்-201816:52:17 IST Report Abuse

விருமாண்டிஆம் .., தமிழகத்தில் மழை இல்லையா ?? மோடி தான் காரணம் . வெயில் 40 டிகிரி யா பாஜக தான் காரணம் ?? ஐபிஎல் சென்னை அணி தோற்றுவிட்டதா அதுவும் பாஜக தான் காரணம் . ராகுல், சோனியாவுக்கு பசிக்கவில்லையா பாஜக தான் காரணம்

Rate this:
Mani - Chennai,இந்தியா
17-ஏப்-201816:41:24 IST Report Abuse

Maniஉண்மையே என்றும் நிலைக்கும்..... குண்டு வெடிப்புக்கும் இந்து அமைப்பாட்டுக்கும் எந்தவிதமான ஒற்றுமையும் இருக்காது என்பது உலகறிந்த உண்மை... உலகம் முழுவதும் குண்டு வைப்பவர்கள் இஸ்லாமிய தீவிவாதிகள் என்பது சிறு குழந்தை வரைக்கும் தெரியும்...அடுத்து எந்த நாட்டில் மும்பை போல காட்டுமிராண்டி தாக்குதல் நடத்தலாம் என்று உங்கள் வழிபாட்டுத்தலங்களில் ஆலோசியுங்கள் மூடர்களே .........

Rate this:
விருமாண்டி - மதுரை,இந்தியா
17-ஏப்-201816:40:40 IST Report Abuse

விருமாண்டிஆம் .., தமிழகத்தில் மழை இல்லையா ?? மோடி தான் காரணம் . வெயில் 40 டிகிரி யா பாஜக தான் காரணம் ?? எதற்கெடுத்தாலும் பாஜக தான்

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X