இறப்பதற்கு 2 நாள் முன் ஜெயலலிதா 20 நிமிடம் பேசினாரா: விசாரணையில் கேள்வி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன் ஜெயலலிதா
20 நிமிடம் பேசினாரா: விசாரணையில் கேள்வி

சென்னை:''சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 2016 டிச., 3ல், எய்ம்ஸ் மருத்துவர்களுடன், ஜெயலலிதா, 20 நிமிடம் பேசினார். மறுநாள், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுஉள்ளது,'' என, சசிகலா வழக்கறிஞர், ராஜா செந்துார் பாண்டியன் தெரிவித்தார்.

ஜெயலலிதா, சசிகலா, ராஜாசெந்தூர்பாண்டியன், கிருஷ்ணப்பிரியா, இளவரசி

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை கமிஷனில், சசி உறவினர்கள், கிருஷ்ணப்பிரியா, விவேக் மற்றும் ஜெ., உடலை, 'எம்பார்மிங்' செய்த, டாக்டர் சுதா சேஷய்யன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி,வெங்கட்ரமணன், அரசு மருத்துவர், சுவாமிநாதன் ஆகியோரிடம், நேற்று குறுக்கு விசாரணை நடந்தது.விசாரணைக்கு பின், ராஜா செந்துார் பாண்டியன் கூறியதாவது:எம்பார்மிங் செய்த டாக்டர், சுதா சேஷய்யன், '2016 டிச., 5 நள்ளிரவு, 11:30 மணிக்கு, 'எம்பார்மிங் செய்ய துவங்கினேன். என் ஆய்வு அடிப்படையில், 15 மணி நேரத்திற்கு முன், ஜெ.,க்கு இறப்பு நிகழ்ந்தது தெரிய வந்தது' என்றார். 'ஜெ., அடித்து கொலை செய்யப்பட்டார். இறந்த பின், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்' என்ற குற்றச்சாட்டுகளை பொய்யாக்கும் வகையில், சுதா சேஷய்யன் சாட்சி அமைந்தது.

உபகரணமும் பயன்படாதுகடந்த, 2016 டிச., 4 மாலை 4:20 மணிக்கு, ஜெ.,க்கு மாரடைப்பு ஏற்பட்ட பின், அவரது உயிரை காப்பாற்ற, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, 'எக்மோ' கருவி

பொருத்தப்பட்டது. டிச., 5ல், டில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து, 'இனி எவ்வித உபகரணமும் பயன்படாது; எவ்வித அசைவும் உடலில் இல்லை' என கூறியதன் அடிப்படையில், முன்னாள் மத்திய அமைச்சர்,வெங்கையா நாயுடு, ஓ.பன்னீர்செல்வம், ராமமோகன ராவ், தம்பிதுரை மற்றும் முக்கிய அமைச்சர்கள் முன்னிலையில், முடிவு எடுக்கப்பட்டது; இது, சாட்சியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிச., 3ல், எய்ம்ஸ் மருத்துவர்கள், ஜெ.,வை பார்த்துள்ளனர். அப்போது, அவர்களுடன், ஜெயலலிதா, 20 நிமிடம், நாற்காலியில் அமர்ந்து பேசியுள்ளார். அன்றைய தினம், அவரின் இதயம் நன்றாக இருந்ததாக, மருத்துவர்கள் கையொப்பமிட்ட ஆவணத்தை, தாக்கல் செய்துஉள்ளோம்.'ஜெ., தாக்கப்பட்டு, பின், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாரா' என, ராமமோகன ராவிடம் கேட்டபோது, அதை முற்றிலும் மறுத்தார். மருத்துவமனையிலிருந்த ஜெ., அழைத்து, 'நான் இறந்து விட்டதாக விஷம செய்தி பரவுகிறது. அது, தவறு என, செய்தி வெளியிடுங்கள்' என கூறியதாக, ராவ் சாட்சி அளித்துள்ளார்.

எயம்ஸ் மருத்துவர்கள் விளக்கம்


ஆணி கட்டையால், ஜெயலலிதாவை அடித்துள்ளதாக, சிலர் கூறினர். 'உடலில் ஓட்டைஇருந்திருந்தால், நான் கொடுத்த திரவம், ஓட்டை வழியே வந்து விடும்' என, எம்பார்மிங் செய்த டாக்டர் கூறியுள்ளார். ஜெ.,க்கு மாரடைப்பு ஏற்பட்ட பின் நடந்த விளக்க கூட்டத்தில், அமைச்சர்கள் பங்கேற்றனர். அதேபோல, மறுநாள் நடந்த கூட்டத்தில், எயம்ஸ் மருத்துவர்கள் விளக்கம் அளித்தபோது, அமைச்சர் தங்கமணி உட்பட,

Advertisement

முக்கிய அமைச்சர்கள் உடனிருந்துள்ளனர், என்று அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ்.,சிடம் இன்று விசாரணை!ஜெ., முதல்வராக இருந்த போது, அவரது செயலராக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராமலிங்கம் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இவர் தற்போது கலை மற்றும் பண்பாட்டு இயக்கக ஆணையராக உள்ளார். நாளை ஜெ., உதவியாளர் பூங்குன்றன் ஆஜராக உள்ளார்.

இளவரசி மகள் மறுப்பு!


விசாரணைக்கு பின், இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா கூறுகையில், ''நான் கொடுத்த வாக்குமூலம் குறித்து சில விளக்கம் கேட்டனர்; அதற்கு பதில் அளித்தேன். 'சசிகலா, அதிகாரத்தில் தலையிடவில்லை' என, நான் பிரமாண பத்திரம் எதுவும் தாக்கல் செய்யவில்லை,'' என்றார்.அரசு டாக்டர் சுவாமிநாதன் கூறுகையில், ''ஜெ.,க்கு நேரடியாக வைத்தியம் செய்தீர்களா என கேட்டனர்; இல்லை என்றேன். ஐந்து நிமிடங்கள் விசாரணை நடந்தது. மருத்துவ குறிப்புகளில் சில கேள்விகள் கேட்டனர்; பதில் கூறினேன்,'' என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kdadhi - Bangkok,தாய்லாந்து
19-ஏப்-201801:48:55 IST Report Abuse

kdadhiபிஜேபி + மூத்த ஆதிமூகா அடிமைகள் சேர்ந்து செய்த சாதி .... எத்தனை காலம்தான் அடிமையா இருப்பது ...

Rate this:
shankar - chennai,இந்தியா
17-ஏப்-201817:37:03 IST Report Abuse

shankarசம்பந்தமே இல்லாத சாதாரண மக்களுக்கே கொஞ்ச நஞ்சம் தெரியும்போது அங்கே இருந்த கட்சி காரங்க அப்போது முதல்வர் பதவி கிடைத்தவுடன் சிரித்து கொண்டே வெளியே வந்த ஓபிஸ் இப்போ இருக்கும் இ பி எஸ் இவர்களுக்கு ஒண்ணுமே தெரியாதாம் இவங்க விசரனை கமிஷன் வேற வெப்பங்களாம் நம்பிட்டோம்.

Rate this:
Nancy - London,யுனைடெட் கிங்டம்
17-ஏப்-201815:31:54 IST Report Abuse

Nancyவேல இல்லாத மாமிய்யா எரும மாட்ட சொரிஞ்ச கத தான் , அரசின் தெண்ட செலவு - இந்த புலிகேசிகள் எப்போ தங்க கிணறு தோண்ட போறாங்களோ

Rate this:
17-ஏப்-201814:24:44 IST Report Abuse

ஆப்புஎம்பால்மிங் செய்தபின் ஆணிக்கட்டையால் அடித்தால் திரவம் வெளியே வந்துவிடும். ஆனா செத்த பிறகுதான் எம்பால்மிங் செய்வாங்க...செத்த கட்டையை ஏன் ஆணிக் கட்டையை அடிக்கணும்? ஒருவேளை உயிரோட இருக்கும்போதே எம்பால்மிங் செஞ்சுட்டாங்களா? அம்மாவுக்கே வெளிச்சம்.

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
17-ஏப்-201813:21:17 IST Report Abuse

dandyஐஸ் கட்டியில் படுக்கவைத்து விசாரித்தால் இந்த பொய்யர்கள் உண்மை சொல்வார்கள் ....இந்தியாவில் சடடம் என்று ஒன்று உள்ளதா?

Rate this:
Raj Pu - mumbai,இந்தியா
17-ஏப்-201815:21:17 IST Report Abuse

Raj Puஉன்னை ஐஸ் கட்டியில் படுக்க வச்சு விசாரிக்கணுமா, ஆஸ்திரேலியாவில் உள்ள நீ இங்கு கூட இருந்தது பார்த்தது போல பேசுகிறாய், ஆதாரம் இருந்தால் கமிஷனிடம் கூறவேண்டியது தானே...

Rate this:
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
17-ஏப்-201811:35:24 IST Report Abuse

R.MURALIKRISHNANமக்கள்கேள்வியே இவர்கள் சொன்ன இறப்பதற்கு முன் உயிரோடு இருந்தாரா என்பதுதான் யுவர் ஆனர்

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஏப்-201820:56:22 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அனைவருக்கும் உள்ள கேள்வி. அரசு தரப்பில் ஒரு நேரத்தி போட்டு செய்தி வருவதற்கு பல நிமிடங்களுக்கு முன்பே மோடியோட டுவீட் வந்து விட்டது என்பது இங்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. விஷயத்தை "முடிக்க" சொல்லி டுவீட் போட்டு முந்திகிட்டவர் நமது முத்து "மோதி" பிரதமர்....

Rate this:
christ - chennai,இந்தியா
17-ஏப்-201811:23:08 IST Report Abuse

christமயிலே, மயிலே இறகு போடுன்னு சொன்ன போடாது திருட்டு கும்பலை நாலு தட்டு தட்டுனா உண்மை வெளிவர போகுது .

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
17-ஏப்-201818:44:56 IST Report Abuse

mindum vasanthamஏன் இப்படி வீண் பேச்சு , இப்படி தான் உங்க ஆளு nakkheeran கோபால் , ஜெயாவிற்கு காலை எடுத்து விட்டார் என்று கூறினார் , வீடியோ ரிலீஸ் ஆகி கால்கள் பற்றி தெளிவா தெரிந்து விட்டது , மேலும் அணைத்து விசாரணை தரப்பும் உறுதி படுத்தியுள்ளது , ஆணிகட்டையால் அடித்தார்கள் என்று வீண் புரளி கிளம்புவதற்கு உறுப்பிடியாக எதாவது செய்யலாம் , Rahul Gandhi முதல் venkiah நாயுடு வரை எல்லாரும் அம்மாவை பார்த்து விட்டு தான் சென்றனர் , உளவுத்துறைக்கு தெரியாமலா இருக்கும் , சும்மா வாய்க்கு வந்ததை அனைவரும் அடித்து விடுகின்றனர்...

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஏப்-201811:16:41 IST Report Abuse

Kuppuswamykesavanஅட, அடிப்படை ஆதாரமாக, ஓர் அத்தென்டிக் போட்டோவோ, வீடியோயோ இல்லை. ஆனால், ஒரு ஜிகா சைஸ் மர்ம நாவல் புத்தகத்தின், சேப்ட்டர்கள் மாதிரி, கதையை கொண்டு போகும் விதத்தை பாருங்களேன். அட என்னத்த சொல்ல, அவுங்க கண்களுக்கு, மக்களின் காதுகள் யானை காதுகள் போல, பெரிதாக தெரிகிறதோ என்னவோ?. வாசகர்களுக்கு புரியும்.

Rate this:
Ramesh Sundram - Muscat,ஓமன்
17-ஏப்-201811:08:11 IST Report Abuse

Ramesh Sundramஇறந்த பிறகு அம்மாவின் ஆவி என்னுடன் அமாவாசைக்கும் பௌர்ணமிக்கு வந்து பேசுகிறது என்று ஒரு ஜோசிய காரனை செட்டப் செய்து விடுங்கள் பிறகு பாருங்கள் இந்த கூன்பாண்டிகள் பயந்து நடுங்குவதை

Rate this:
பிரபு - மதுரை,இந்தியா
17-ஏப்-201811:04:43 IST Report Abuse

பிரபுஜெயலலிதா, 20 நிமிடம் பேசினார் என்பது...அவர் இட்டிலி சாப்பிட்டார், டிவி பார்த்தார், என்னை பார்த்து கை அசைத்தார் என்ற சீரியலின் தொடர்ச்சியே. நாளைய எப்பிஸோடில் (episode) என்னவோ? நாளை பார்க்கலாம்...காண தவறாதீர்கள்.

Rate this:
மேலும் 18 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement