Watch: Congress Workers Upset Over Ticket Distribution Vandalize Party Office In Karnataka | காங்கிரஸ் அதிருப்தியாளர்களால் கர்நாடக மாநிலத்தில் கலவரம் Dinamalar
பதிவு செய்த நாள் :
கர்நாடக தேர்தல், சித்தராமையா, கலவரம், காங்கிரஸ்

பெங்களூரு,: கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பிய பலருக்கு 'சீட்' கிடைக்காததால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளதால் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

கர்நாடக தேர்தல், சித்தராமையா, கலவரம், காங்கிரஸ்

கேட்காதவருக்கு சீட்



கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம் 12ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து தேர்தல் பணிகளில் காங்., மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ., ஆகியவை மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த மூத்த பிரமுகர்களுக்கு, 'சீட்' கிடைக்கவில்லை. மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கியதாக முதல்வர் சித்தராமையா மீது இவர்கள் கடும் அதிருப்தி

அடைந்துள்ளனர்.
மாண்டியாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில், கன்னட நடிகர் அம்பரீஷுக்கு 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. கேட்காமலேயே இவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாக அதிருப்தியாளர்கள் கோபம் அடைந்துள்ளனர்.இங்கு 'சீட்' கேட்ட பிரமுகர்களின் ஆதரவாளர்கள் மாவட்ட, காங்., அலுவலகத்தைமுற்றுகையிட்டு சூறையாடினர்.

முதல்வருக்கு எதிராக கோஷம்


அலுவலகத்திலிருந்த நாற்காலிகள், கட்சி பேனர்களை சேதப்படுத்தி முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக கோஷமிட்டனர். சிக்மகளூரில் காயத்திரி சாந்தேகவுடாவுக்கு 'சீட்' கிடைக்காததால் அவரது ஆதரவாளர்கள், மாவட்ட கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து நாற்காலிகளை துாக்கி எறிந்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.பெங்களூருவிலும் பிரமுகர்கள் சிலருக்கு 'சீட்' கிடைக்காததால் குயின்ஸ் சாலையிலுள்ள காங்., தலைமை அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டு, முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மாயகொண்டா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு சிவமூர்த்தி நாயக் என்பவர் பெங்களூருவில் உள்ள, லோக்சபா காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து அவரது காலில் விழுந்து

Advertisement

கெஞ்சினார்.உடுப்பி கார்காளா தொகுதியில் உதய ஷெட்டி முனியாலுவுக்கு 'சீட்' கிடைக்காததால், அவரது ஆதரவாளர்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்; காங்., அலுவலகம் முன் முதல்வர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

உருவ பொம்மைகள் எரிப்பு



கலபுரகி வடக்கு தொகுதியில் மூத்த பிரமுகர் கிருஷ்ணாஜி குல்கர்னி 'சீட்' கேட்டிருந்தார். டில்லி தலைவர்களிடமும் 'லாபி'யில் ஈடுபட்டார். ஆனால் 'சீட்' கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் முதல்வரின் உருவ பொம்மையை எரித்தனர்.ஹன்கல் தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ., மனோகர் தாசில்தாருக்கு 'சீட்' கிடைக்கவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதேபோல் 'சீட்' கிடைக்காத பலர், மாநிலம் முழுவதும் பல இடங்களில் வன்முறையில் இறங்கினர். காங்., அலுவலகங்களை கல் வீசி தாக்கினர். பல இடங்களில் முதல்வரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
'சீட்' கிடைக்காத பலர் அதிருப்தி வேட்பாளராக களமிறங்கவும் முடிவு செய்துள்ளனர். இதனால், முதல்வர் சித்தராமையா கலக்கம் அடைந்துள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஏப்-201821:43:05 IST Report Abuse

kulandhaiKannanதோற்பதற்கு இவ்வளவு அடிதடியா? வேட்டி அவிழாமல் ஒரு காங்கிரஸ் சண்டையா என்று த.நா காங்கிரஸார் நமுட்டு சிரிப்பார்கள்

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
17-ஏப்-201819:16:17 IST Report Abuse

Vijay D Ratnamஇந்தியா சுதந்திரம் பெற்றதும் காங்கிரஸ் கட்சியை கலைத்து விடவேண்டும் என்றார் மஹாத்மா காந்தி. ஆனால் அவர் சொன்னதை செய்யாமல் அதை வைத்து ஒரு கூட்டம் எழுபது ஆண்டுகளாக பிழைப்பு நடத்துகிறது. இன்று அது காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை அதாவது தலை முதல் கால் வரை செல்லரித்து போய் கோமா ஸ்டேஜில் கிடக்குது. இனிமேல் போகவேண்டிய இடம் மார்ச்சுவரிதான். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் எண்ணத்தை ராகுல் காந்தி நிச்சயம் நிறைவேற்றுவார்.

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஏப்-201817:41:33 IST Report Abuse

Kuppuswamykesavan////Janarthanan - Al Khor,கத்தார் 17-ஏப்-2018 09:50 மக்கள் சேவை செய்ய இவர்களுக்குள் நடக்கும் போட்டா போட்டியை பார்த்தால் பெருமையா இருக்கிறது அல்லவா? இந்த போட்டி மக்கள் சேவைக்கா அல்லது கொள்ளை அடிப்பதற்கா???//// - சந்தேகம் என்ன வாசகரே?, கொள்ளை அடிக்கத்தான். லஞ்சம் ஊழல் கட்டிங் கமிசன்களில் சம்பந்தப்பட்ட பல அரசியல்வாதிகளின் செய்திகள் பல வந்திருக்குதானே?.

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X