Woman lecturer advises students to 'adjust' with officials, detained | 'வாட்ஸ் ஆப்' ஆடியோ சர்ச்சை: சிக்குகிறார் பல்கலை உதவி பேராசிரியர் Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'வாட்ஸ் ஆப்' ஆடியோ சர்ச்சை விவகாரம்:
சிக்குகிறார் பல்கலை. உதவி பேராசிரியர்

மதுரை,: பேராசிரியை நிர்மலாதேவியின் பேச்சு வெளியான சர்ச்சையில், மதுரை காமராஜ் பல்கலை உதவி பேராசிரியர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

'வாட்ஸ் ஆப்' ஆடியோ சர்ச்சை: சிக்குகிறார் பல்கலை உதவி பேராசிரியர்

அந்த ஆடியோவில், 'உயர் கல்வி அதிகாரி தொடர்பு கிடைப்பது பெரிய ஆப்பர்சூனிட்டி... சில விஷயங்கள் சீக்ரெட்டா செய்யணும். அப்படி செய்தால் அகடமிக் சைடில் பெரிய அளவிற்கு உங்களை என்னால் கொண்டு செல்ல முடியும். எம்.கே.,யுனிவர்சிட்டியில் (மதுரை காமராஜ் பல்கலை) தெரிந்த அதிகாரிகள் உள்ளனர். கல்லுாரி ஸ்டூடென்ட்டை சில விஷயங்களுக்காக எதிர்பார்க்கின்றனர்... பேப்பர் வேல்யூயேஷனுக்கு நான் எம்.கே.யு., சென்ற போது அவர்கள் என்னிடம் சில ரெக்குயர்மென்ட் கேட்டனர். நானும் அஸ்சூரன்ஸ் கொடுத்துள்ளேன்... தியரி பேப்பரில் கூட உங்கள் மதிப்பெண்ணில் கை வைக்காத வகையில் என்னால் செய்ய முடியும்... பேப்பர் வேல்யூயேஷனுக்கு முன்பே இங்குள்வங்கள எனக்கு தெரியும்...' என சர்ச்சைகள், மதுரை காமராஜ் பல்கலையை சுழன்று அடிக்கின்றன.

சிலருக்கு தொடர்பு

இதுகுறித்து பல்கலை பேராசிரியர்கள் கூறியதாவது:'நெருப்பில்லாமல் புகை கிளம்பாது' என்பதற்கு ஏற்ப, இப்பிரச்னையில் பல்கலையை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருக்கலாம். பேராசிரியை நிர்மலா தேவியுடன் கல்லுாரியில் படித்த ஒருவர், தற்போது பல்கலை உதவி பேராசிரியராக உள்ளார். அவர் மூலம் தான் நிர்மலா தேவிக்கும் பல்கலைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவர் உட்பட சிலர், பல்கலை அதிகாரிகள் பெயரை கூறி கோலோச்சி வருகின்றனர். பேராசிரியை நிர்மலா தேவியின் பின்னணியில், பல்கலையில் முறைகேடுகள் நடந்தனவா எனவும் விசாரிக்க வேண்டும், என்றனர்.- - -

போராட்டம்


இப்பிரச்னையில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவிகள் 'உமன்ஸ் போரம்' என்ற அமைப்பு மூலம் கல்லுாரி முதல்வர் மற்றும் செயலருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து


மார்ச் 21ல் பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நிர்மலாதேவியை கைது செய்ய கோரியும், தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நேற்று கல்லுாரி முன்பு ஜனநாயக மாதர் முன்னேற்ற சங்கம், இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள், மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்.டி.ஒ., செல்லப்பா, தாசில்தார்கார்த்திகேயினி, கூடுதல் எஸ்.பி., மதி, டி.எஸ்.பி., தனபாலன் ஆகியோர் கல்லுாரியில் விசாரித்தனர்.


விசாரணைக்கு கவர்னர் உத்தரவு



நிர்மலா தேவி விவகாரம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.விசாரணை அதிகாரியாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சந்தானம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றியதுடன் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார். தலைமைச் செயலர் அந்தஸ்தில் ஓய்வு பெற்றவர். ஓய்வுக்கு பின் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் உறுப்பினராக பணியாற்றினார். பல்கலை வேந்தருக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி கவர்னர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்விவகாரத்தில் 'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பக் கூடாது' என கவர்னர் தெரிவித்துள்ளார்.


விசாரணைக்குழு அமைப்பு


ஆடியோவில் பல்கலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதால் பல்கலை அளவிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.பல்கலை மானியக் குழு நிதி 45 லட்சம் ரூபாயை, 2009 - 2011 வரை தேவாங்கர் கல்லுாரி முறைகேடு செய்தது குறித்து விசாரணை நடக்கிறது. சிண்டிகேட் உறுப்பினர் லில்லிஸ்திவாகர், டீன்
நல்லகாமன் கொண்ட ஐவர் குழு, கல்லுாரி முதல்வர் சங்கரனிடமும் விசாரணை நடத்தியது. இந்நிலையில்மார்ச் 15ல் 'வாட்ஸ் ஆப்' ஆடியோ வெளியாகியது. 19 ம் தேதி அந்த பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்டு அந்த ஆடியோ பேச்சை பதிவு செய்தது போல் தெரிகிறது.கல்லுாரியில் நடந்த நிதி முறைகேட்டை திசை திருப்பக் கூட ,இதுபோன்ற சர்ச்சையை யாராவது கிளப்பியிருக்கலாமா என பல்கலை குழு

Advertisement

விசாரணை நடத்துகிறது. பல்கலையில் நடந்த புத்தாக்க பயிற்சியில் அந்த பேராசிரியை பங்கேற்றுள்ளார். ஆடியோவில் அவர் கூறுவதுபோல் மதிப்பெண்ணை அதிகரிப்பது, குறைப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை. இப்பிரச்னை குறித்து பல்கலை குழு விசாரிக்கும். பதினைந்து நாளில் விசாரணை முடிக்கப்படும்.செல்லத்துரைமதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர்.


சர்ச்சை பேராசிரியை கைது



அருப்புக்கோட்டை, மாணவிகளை தவறான செயலுக்கு அழைத்து, 'வாட்ஸ் ஆப்' ஆடியோ சர்ச்சையில் சிக்கிய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லுாரி கணித பேராசிரியை நிர்மலாதேவி, 49, நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
இவர், அக்கல்லுாரி மாணவிகள் சிலருடன் போனில் பேசும் ஆடியோ 'வாட்ஸ்ஆப்'பில் பரவியது. மாணவிகள் புகாரின்படி மார்ச் 21ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடையே கல்லுாரி செயலர் ராமசாமி புகார் அளித்தார். இதன்படி நிர்மலா தேவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கூடுதல் எஸ்.பி., மதி, டி.எஸ்.பி., தனபால்
விசாரித்தனர்.நேற்று கைது செய்யப்படலாம் என தகவல் பரவியதால், மதியம் 3:00 மணி முதலே ஆத்திப்பட்டியில் உள்ள வீட்டை பூட்டி விட்டு நிர்மலா தேவி உள்ளே இருந்தார். மாலையில் அங்கு சென்ற வருவாய் துறையினர், போலீசார் அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.'வீட்டின் முன் குவிந்த பத்திரிகையாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டால் வெளியே வருவதாக அவர் நிபந்தனை விதித்தார். திடீரென மாலை 6:30 மணிக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஜீப்பில் வந்தார். பத்திரிகையாளர்கள் படம் எடுக்க முடியாத வகையில் வீட்டின் முன் ஜீப்பை நிறுத்தி நிர்மலாதேவியை கைது செய்து அழைத்து சென்றார்.



Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYABALAN R - MIYAPUR, HYDERABAD.,இந்தியா
17-ஏப்-201819:45:32 IST Report Abuse

JAYABALAN Rஇதுபோல் அதிகாரிகளீ சம்பந்தப்பட்ட எந்த வழக்கில் எல்லோரும் தண்டிக்கப்பட்டிரேக்கிறார்கள்?????

Rate this:
appavi - cumbum,இந்தியா
17-ஏப்-201819:13:07 IST Report Abuse

appaviசுமார் 15 வருடங்களுக்கு முன்பு இது போன்ற விவகாரம் பழனி நகரில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்ததாக செய்தி வந்தது ...வழக்கம் போல் அது மறைக்கப்பட்டது ....இதுவும் அதே போல் மறைக்கப்படும் அப்பால் மறக்கப்படும் ...பெண்ணாய் பிறப்பது பாவமா அல்லது சாபமா?

Rate this:
Nathan - Bengaluru,இந்தியா
17-ஏப்-201818:24:10 IST Report Abuse

Nathanஆரம்பத்திலிருந்து கவர்னர் மீது பல்வேறு புகார்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது... இவர் நம்பகத் தன்மையற்றவராகிவிட்டார்... மாநில கவர்னர் முதலில் பதவி விலக வேண்டும்... இந்த கிரிமினல் கேஸில் உண்மை வெளி வர வேண்டும் என்றால் கர்நாடக காவல் துறை விசாரிக்க வேண்டும்...

Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X