எஸ்.சி., - எஸ்.டி., சட்ட விவகாரம்: சென்னையில் தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எஸ்.சி., - எஸ்.டி., சட்ட விவகாரம்
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

சென்னை: ''பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான, வன்கொடுமை தடுப்புச்சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு, சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்,'' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறினார்.

எஸ்.சி., - எஸ்.டி., சட்ட விவகாரம்:  சென்னையில் தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்

வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு மேல்முறையீடு செய்து, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மக்களுக்கு, உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும், தி.மு.க., தலைமையிலான கூட்டணி கட்சிகள், நேற்று, சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தின.ஆர்ப்பாட்டத்திற்கு, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் தலைமை வகித்தார். ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலர், பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலர், முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேறு வழியின்றி, சீராய்வு மனு


ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக் காலத்தில், 1969 - 71ம் ஆண்டுகளில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, 'கான்கிரீட்' வீடுகள் கட்டித் தரப்பட்டன. தாழ்த்தப்பட்ட

மக்களுக்கென, தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு, 16ல் இருந்து, 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது.தமிழகம் முழுவதும், 150 இடங்களில், சமத்துவபுரங்கள் உருவாக்கப்பட்டன. வன்கொடுமைதடுப்புச் சட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு, சீராய்வு மனுவை, உடனே தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கிற போராட்டங்களை பார்த்த பின், வேறு வழியின்றி, சீராய்வு மனுத் தாக்கல் செய்ய, மத்திய அரசு முன்வந்துள்ளது.
பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மிகப்பெரிய கொடுமையாக, உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிற தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு, சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும்; அல்லது வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவை, அரசியல் அமைப்புச் சட்டத்தின், ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

23ல் தி.மு.க மனித சங்கிலி


சென்னை : காவிரி மேலாண்மை வாரியத்தை, மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி, வரும், 23ல், தமிழகம் முழுவதும், மனித சங்கிலி போராட்டம் நடத்த, தி.மு.க., மற்றும் கூட்டணிகட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் தலைமையில், கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், வரும், 23ல், மாலை 4:00 மணி

Advertisement

முதல், 5:00 மணி வரை, தமிழகம் முழுவதும், மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

போராட்டம் தொடரும்.


மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, அனைத்து கட்சித் தலைவர்கள் பிரதமரை சந்தித்து அழுத்தம் தருவது எனவும், அதற்கான ஏற்பாடுகளை, ஸ்டாலின் செய்திட வேண்டும் என்றும், முடிவு செய்யப்பட்டது.கூட்டம் முடிந்த பின், ஸ்டாலின் அளித்த பேட்டி:மனித சங்கிலி போராட்டத்தில், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பர்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, போராட்டம் தொடரும்.
அனைத்து கட்சிகள் சார்பில், டில்லி சென்று பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். கவர்னர் நேரம் வாங்கிக் கொடுத்தால், அதை பயன்படுத்தி கொள்வோம்.'ஸ்டெர்லைட்' ஆலை விவகாரத்தில் யார், யார் பணம் வாங்கினர் என்பதை தெரிவிக்க வேண்டும். கல்லுாரி பேராசிரியை நிர்மலாதேவி மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Marappan - erode,இந்தியா
17-ஏப்-201821:27:31 IST Report Abuse

Subramanian Marappanஇவர்கள்தான் தமிழ் நாட்டு மக்களின் மொத்த குரல் மாதிரி பேசுகிறார்கள்.அது உண்மை அல்ல.அரை வேக்காடுகளும் துதிபாடிகளும் வெட்டி ஆட்களும் சேர்ந்து ஏதோ ஒட்டு மொத்த மக்களும் தங்கள் பின்னே என்று சொல்லி திரிகிறார்கள். உச்ச நீதி மன்றம் இழக்கப்படும் அநீதியை சுட்டிக்காட்டி நிவாரணம் கொடுத்துள்ளது. அதை சரியாக புரிந்து கொள்ளாது ஆர்ப்பாட்டம் செய்துகொண்டுஇருக்கிறது எந்த விதிமுறையும் இன்றி அரசியல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மீண்டும் மீண்டும் இட ஒதுக்கீடு சலுகை பெரும் கூட்டம்.

Rate this:
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
17-ஏப்-201817:01:03 IST Report Abuse

வைகை செல்வன்திமுகவில் மனிதர்களுக்கு எங்கே போவது? கஷ்டமாச்சே ....நச் கமெண்ட் ...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201816:36:26 IST Report Abuse

Kasimani Baskaranவெட்டியாக இப்படி ஏப்ரல் மாத வெயிலில் மக்களின் உயிரை வாங்குவதற்குப்பதிலாக நாலு குளம் குட்டைகளில் தூர் வாரினாலாவது மண்ணள்ளிவிட்ட பாவம் கொஞ்சமாவது குறையும்... இல்லை என்றால் பாவச்சுமைதான் அதிகரிக்கும்..

Rate this:
s t rajan - chennai,இந்தியா
17-ஏப்-201816:07:18 IST Report Abuse

s t rajanகருணா, கனி, ச்டாலின் வீட்டுக்குள் தங்கச் சுரங்கமே இருக்கும். எடுத்து உருக்கி சங்கிலி போடுவதை விட்டு இதெனய்யா மனிதச் சங்கிலி ? எத்தனை நாளுக்கய்யா இந்த தில்லு முல்லு கலகத்தை பொறுத்துக்கு வீங்க.

Rate this:
Barakathulla - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201814:23:03 IST Report Abuse

Barakathullaமே 3-தேதி வரை ஒரு ஆணியும் புடுங்க முடியாது எதுக்கு வேஸ்ட்டா இந்த போராட்டம் ...

Rate this:
sridhar - Chennai,இந்தியா
17-ஏப்-201813:39:54 IST Report Abuse

sridharநீங்களெல்லாம் சேர்ந்து நின்றால் அது எப்படி ' மனித' சங்கிலியாக இருக்கமுடியும்.

Rate this:
Balaji - Bangalore,இந்தியா
17-ஏப்-201809:50:29 IST Report Abuse

Balaji எந்த சங்கிலி போட்டாலும் மோடி அசைய மாட்டார்?

Rate this:
balakrishnan - coimbatore,இந்தியா
17-ஏப்-201809:33:58 IST Report Abuse

balakrishnanபெரிய அளவில் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டார்கள், மத்திய அரசின் முடிவுக்காக பொறுத்து இருக்க வேண்டும், இந்த தொடர் போராட்டம் எல்லாம் மக்களுக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கும், மோடி அவர்களிடம் இருந்து எந்த ஒரு சாதகமான முடிவும் வராது, வரக்கூடிய தேர்தல்களில் பெரிய அளவில் வெற்றிபெற்று, மத்தியில் வலிமையுடன் இடம்பெறும் சமயம், நமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும், அதுவும் மத்தியில் ஒரு மைனாரிட்டி அரசு அமையும் பட்சம், இழந்த உரிமைகளை பெறமுடியும்,

Rate this:
Vijay - Bangalore,இந்தியா
17-ஏப்-201811:00:36 IST Report Abuse

Vijayஎந்த உரிமை? அடுத்த 4G க்கு அடிபோடுகிறீர்களா.........

Rate this:
Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா
17-ஏப்-201815:20:57 IST Report Abuse

Gokul Krishnanபத்து வருடம் மணிமேகலையின் மத்திய அரசுடன் ஒட்டி உறவாடி எதனை திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தீர்கள் என்று பட்டியலிட முடியுமா . சன் டிவி பல சேனல் கலை , பல எப் எம் அலைவரிசையை தொடங்கி நார்களே அதை பற்றியும் கொஞ்சம் சொல்லுங்கள்...

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
17-ஏப்-201808:51:05 IST Report Abuse

C.Elumalaiஎந்த மக்கள் ஸ்டாலினிடம் வந்து எங்களுக்காக, போரடுங்கள் கோரிக்கை வைத்தனர். இவர்களாகவே போராட்டம் நடத்தவேண்டியது முடித்துகொள்ள வேண்டியது. வெற்றி வெற்றி கூவிக்கொள்வது, ஜால்ராகட்சிகள் கைதட்டல் கோஷம்,நாடகம் நடத்தி பொழுது போக்கிக்கொள்வது. போராட்டத்தின் லட்சணம்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201808:44:10 IST Report Abuse

Srinivasan Kannaiyaதமிழக மக்களை நிம்மதியா இருக்க விடமாட்டீங்க.,..

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement