ரூ.100 கோடி சர்ச்சை: சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்குமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.100 கோடி சர்ச்சை: சுற்றுச் சூழல் அனுமதி கிடைக்குமா?

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரூ.100 கோடி, சர்ச்சை, சுற்றுச் சூழல், அனுமதி, கிடைக்குமா?

சென்னை:தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில் சென்னை, திருமங்கலத்தில் கட்டப்பட்ட, அரசு ஊழியர் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டு, ஒன்னரை ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.அனுமதி இல்லை:

இதற்கு காரணம், மத்திய சுற்றுச் சூழல் துறையில் அனுமதியை பெறாததுதான். அனுமதி வாங்கிக் கொண்டுதான், கட்டடத்தைக் கட்டத் துவங்க வேண்டும் என்பது விதி. அதைப் பற்றி கவலைப் படாமல், ஜெயலலிதா ஆட்சி காலத்தில், வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் கூறியதன் பேரில், காண்ட்ராக்ட் விடப்பட்டு, சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் கட்டினர்.தற்போது, புதிய அமைச்சராகி இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவின் பேரில், சுற்றுச் சூழல் அனுமதி பெற, மத்திய அரசுடன், தமிழக அதிகாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், அனுமதி கிடைப்பது பெரும் சிரமம் என் கின்றனர், வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்.

அரசுத் தரப்புக்காக, அனுமதி இல்லாமல் கட்டி முடிக்கப்பட்ட பின், அனுமதி வழங்கினால், அதையே காரணமாக காட்டி, தனியார் கட்டுமான நிறுவனங்கள், கோர்ட்டுக்குச் சென்று, அனுமதி கேட்கும். அதனால், தவறான முன்னுதாரணத்துக்கு காரணமாகி விடக் கூடாது என்பதாலேயே, விதிகளை தளர்த்தி அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் துறை மறுத்து வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thangaraja - tenkasi,இந்தியா
17-ஏப்-201815:17:39 IST Report Abuse
thangaraja பரவா இல்லை அதையும் மருத்துவமனையாக மாற்றி விடுங்கள் ..அனுமதிபெறாமல் கான்டராக்ட் விட்ட அமைச்சரை நன்கு விசாரித்து உள்ளே தள்ளவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
17-ஏப்-201810:22:21 IST Report Abuse
R. Vidya Sagar மத்திய அரசுடன் இணக்கம்?????
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201814:11:29 IST Report Abuse
Pasupathi Subbianமத்திய அரசு அனுமதி மறுப்பு என்பதை நன்கு படித்து புரிந்துகொள்ளவேண்டும். இதில் இணக்கம் எப்படி எங்கே வரும்....
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஏப்-201808:55:48 IST Report Abuse
Bhaskaran அப்போ மக்கள் வரிப்பணம் நூறுகோடி எள்ளுதான்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201808:12:42 IST Report Abuse
Srinivasan Kannaiya வைத்திய லிங்கம் இன்ஸ்டன்ட் காசு பார்க்க காண்ட்ராக்ட் விட்டார்...இப்பொழுது முழிக்கிறார்கள்... ஏன் அப்பொழுது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நீதிமன்றம் சென்று இருக்கலாம்... அல்லது ஊடகங்களுக்கு ரகசிய தகவல் அனுப்பி இருக்கலாம்... எதுவும் செய்யவில்லை... பொதுமக்கள் பணம் வீண்...முன்னுதாரணம் ஆகாமல் இருப்பது மிகவும் நன்று...
Rate this:
Share this comment
Cancel
Gajageswari - mumbai,இந்தியா
17-ஏப்-201807:36:10 IST Report Abuse
Gajageswari மத்திய அரசின் முடிவு சரியானது
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
17-ஏப்-201806:49:31 IST Report Abuse
Nalam Virumbi இந்த ப்ராஜெக்ட் அனுமதி வழங்கிய அமைச்சர் அதிகாரிகள் ஆகியோரை கைது செய்து உள்ளே தள்ளுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201803:57:05 IST Report Abuse
Kasimani Baskaran வவுத்து லிங்கம் சட்டத்தை மீறி கட்டி இருக்கிறார்... மந்திக்குத்தான் அறிவில்லை - அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்?
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201803:52:05 IST Report Abuse
ஆப்பு அம்மாஆட்சி... பொற்காலமாச்சே... காண்ட் ராக்டர்களுக்கு.....
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
17-ஏப்-201800:27:24 IST Report Abuse
ramasamy naicken சுருக்கமாக சொன்னால் வைத்திலிங்கம் ஒரு 30 அல்லது 40 கோடிகள் சுருட்டிவிட்டு சென்றுவிட்டான். இப்போது தமிழக மக்கள் தலையில் அது விழ போகின்றது.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
17-ஏப்-201800:22:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஸ்டெரிலைட்டுக்கே அனுமதி கொடுத்த அசகாயசூரர்கள் அவர்கள். மாசாவது, மண்ணாங்கட்டியாவது. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அனுமதி கொடுக்கும் "உன்னத" கொள்கை உள்ள துறை அது. அரசு தரப்பில் லஞ்சம் கொடுக்கமாட்டார்கள் அதனால் தங்கள் கொள்கையை விட்டு தராமல் அடம் பிடிக்கிறார்கள். அரசு தனது பிடிவாதத்தி தளர்த்திக்கொண்டு லஞ்சம் கொடுத்தால் வேலை நிச்சயம் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை