மக்கள் அதிகம் பார்க்கும், 'டிவி' எது: கண்காணிக்க மத்திய அரசு திட்டம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
மக்கள் அதிகம் பார்க்கும், 'டிவி' எது:
கண்காணிக்க மத்திய அரசு திட்டம்

புதுடில்லி 'டிவி' பார்ப்பவர்கள், எந்தெந்த சேனல்களை அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள, மத்திய அரசு புது முயற்சியை துவங்கியுள்ளது.

மக்கள் அதிகம் பார்க்கும், 'டிவி' எது: கண்காணிக்க மத்திய அரசு திட்டம்

'டிவி' பார்ப்பவர்கள், எந்தெந்த சேனல்கள் மற்றும் அதில் எந்தெந்த நிகழ்ச்சிகளை அதிகம் விரும்பி பார்க்கின்றனர் என்ற தகவல்களை, 'பார்க்' எனப்படும், ஒளிபரப்பு துறை பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் என்ற தனியார் அமைப்பு, தற்போது கண்காணித்து வருகிறது.இந்த அமைப்பினர், நாடு முழுவதும் உள்ள சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான, 'டிவி'க்களின் உள்ளே, 'பீப்பிள்ஸ் மீட்டர்' எனப்படும்,

கண்காணிப்பு கருவியை பொருத்துகின்றனர். அதில் இருந்து கிடைக்கும், சிக்னலை வைத்து, எந்தெந்த அலைவரிசைகள், எவ்வளவு நேரம் பார்க்கப்பட்டன என்ற தகவல்களைபெறுகின்றனர்.இந்த புள்ளி விபரங்களின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் விளம்பரங்கள், தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன.

நம்பகத்தன்மை


இந்நிலையில், இவர்களின் ஆராய்ச்சி, எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் கேள்வி எழுப்பி உள்ளது.இதையடுத்து, கேபிள் இணைப்புக்கு பதிலாக, தற்போது நாடு முழுவதும் வழங்கப்பட்டு வரும், 'செட்டாப் பாக்ஸ்' என்றகருவிகளில், 'டிஜிட்டல் சிப்'களை பொருத்தி, பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிட, தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இது சம்பந்தமாக, 'டிராய்' எனப்படும் தொலைத்தொடர்புத்துறை

Advertisement

ஒழுங்குமுறை ஆணையத்திடம், அதன் கருத்தை கேட்டுள்ளது. இதற்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, காங்., செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:பா.ஜ., அடுத்தக்கட்ட கண்காணிப்பு பணியை துவங்கிவிட்டது. நீங்கள் என்ன, 'டிவி' நிகழ்ச்சியை பார்க்கிறீர்கள் என்பதை, உங்கள் அனுமதி இல்லாமல் தெரிந்து கொள்ள, மத்திய அரசு விரும்புகிறது; இது, தனி மனிதனின் அந்தரங்கத்தில் மூக்கை நுழைக்கும் செயல்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
17-ஏப்-201819:13:28 IST Report Abuse

balநாங்கள் எத்தனை முறை சாப்பிடுகிறோம், தூங்குகிறோம், கழிவறை போகிறோம் என்றும் வேவு பார்க்கலாமே.. வெட்கம் கெட்டவர்கள் ...நம் வாழ்க்கையில் புகுந்து விளையாடுகிறது...எங்கு போனது மனித உரிமை ஆணையம். எங்கு போனது நம் உரிமைகள்.

Rate this:
tamilselvan - chennai,இந்தியா
17-ஏப்-201812:28:55 IST Report Abuse

tamilselvanமத்திய மாநில அரசுகள் முதலில் தொலைகாட்சி ஒளிபரப்பு காலை 5மணி முதல் இரவு 10 .30மணிக்கு மேலே தொலைகாட்சி ஒளிபரப்பை நிறுத்துங்கள் இதை செய்ங்கள் அதை விட்டு எந்த தொலைகாட்சிகள் மக்கள் அதிகமாக பார்க்கிறார்கள் என்பதை கணக்கு எடுப்பதை நிறுத்துங்கள்

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
17-ஏப்-201811:10:25 IST Report Abuse

Kuppuswamykesavanஎல்லாம் சரி, அந்த டிவி, இந்த சின்னத்திற்குத்தான் ஓட்டு போட வேண்டும் எனபது போல, மூளை சலவையை, அதன் பார்வையாளர்கள் மீது திணித்தால், அந்த பார்வையாளர்களும் அப்படியே செய்வார்களா?, அதாங்க ஓட்டு.

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)