ரூ.10 லட்சம் வரை 'ஆன்லைன்' விண்ணப்பம் கட்டாயமில்லை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
வைப்பு நிதியில் ரூ.10 லட்சம் வரை எடுக்க
'ஆன்லைன்' விண்ணப்பம் கட்டாயமில்லை

புதுடில்லி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வரை எடுக்க, 'ஆன்லைன்' விண்ணப்பம் கட்டாயம் என்ற உத்தரவை, மத்திய அரசு, தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

ரூ.10 லட்சம் வரை 'ஆன்லைன்' விண்ணப்பம் கட்டாயமில்லை

இ.பி.எப்., எனப்படும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியம் சார்பில், பிப்ரவரியில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 'வைப்பு நிதியில் இருந்து, ஒரே நேரத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க விரும்பும் ஊழியர்கள், ஆன்லைன் எனப்படும் இணையம் வழியே

விண்ணப்பிப்பது கட்டாயம்' என, தெரிவிக்கப்பட்டது.
இதில் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக,சந்தாதாரர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியம் சார்பில், சமீபத்தில் மீண்டும் வெளியிடப்பட்ட அறிக்கை:
வைப்பு நிதி கேட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் ஊழியர்களின் விண்ணப்பம், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அவர்கள், அந்த விண்ணப்பத்தை ஏற்றாலும், ஏற்காவிட்டாலும், அது குறித்து மூன்றுநாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்.

வைப்பு நிதியில், ஒரே சமயத்தில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்க விரும்புவோர், ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவில், பல சிக்கல்கள் இருப்பதாக

Advertisement

புகார்கள் வந்தன. குறிப்பாக, வெளிநாட்டில் வசிக்கும் சந்தாதாரர்களிடமிருந்து அதிக புகார்கள் வந்துள்ளன. இதை மனதில் வைத்து, அந்த முடிவு, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுக்க விரும்புவோர், காகிதம் மூலமாகவும், இனி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201814:55:06 IST Report Abuse

Indianதுக்ளக் ஆட்சியை தூக்கி சாப்பிட்டு விட்டது மோடி ஆட்சி

Rate this:
17-ஏப்-201814:19:21 IST Report Abuse

ஆப்புபணம் 10 லட்சம் வரை எடுக்கலாம்...ஆனா குடுக்கத்தான் நோட்டுத் தட்டுப்பாடு.... இப்ப என்ன செய்யுவீங்க?

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201808:37:12 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎதையும் பிளான் பண்ணி செய்யணும்... ஓக்கே

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)