கலெக்டர் ஆபீசில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி : தி.மு.க. செயலர் மீது நிலமோசடி குற்றச்சாட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி : தி.மு.க. செயலர் மீது நிலமோசடி குற்றச்சாட்டு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (4)
Advertisement
கலெக்டர் ஆபீசில் 6 பேர் தீக்குளிக்க முயற்சி : தி.மு.க. செயலர் மீது நிலமோசடி குற்றச்சாட்டு

ஈரோடு:பரம்பரை நிலங்களை, ஈரோடு மாவட்ட, தி.மு.க., துணைச் செயலர் அபகரித்து விட்டதாக கூறி, உறவினர்கள் ஆறு பேர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், தீக்குளிக்க முயன்றனர்.
நாமக்கல் மாவட்டம், வெப்படையைச் சேர்ந்தவர் மஞ்சுளா, 70; இவர், இரண்டு மகன்கள், மருமகள்கள், 2 வயது பேரன் ஆகியோருடன், நேற்று காலை, 11:45 மணிக்கு, ஈரோடு, கலெக்டர் அலுவலகம் வந்தார்.
கூச்சல் : திடீரென, மண்ணெண்ணெய் கேனை எடுத்து, ஆறு பேர் மீதும் ஊற்றி, கூச்சலிட்டனர்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கேனை பறித்து, அனைவர் மீதும் தண்ணீர் ஊற்றினர். அப்போது, மஞ்சுளா மயங்கி விழுந்தார். அவரை தண்ணீர் தெளித்து எழுப்பி, அனைவரையும் சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
மறுப்பு : மஞ்சுளாவின் மூத்த மகன், பிரகாஷ் கூறியதாவது: எங்கள் மூதாதையர் காலத்தில், பிருந்தா வீதியில், தற்போது, 80 கோடி ரூபாய் மதிப்பு பெறும், சொத்துகள் வாங்கப்பட்டன. தந்தை குருசாமியின் தாத்தா காலத்தில், இந்த சொத்துகள் வாங்கப்பட்டன. வாரிசு அடிப்படையில், பங்காளி முறை கொண்ட, ஈரோடு மாவட்ட, தி.மு.க., துணை செயலர் செந்தில்குமார், அதை அனுபவிக்கிறார்; எங்களது பங்கை தர மறுக்கிறார். அதிகாரிகளிடம் மனு வழங்கினாலும், போலீசில் புகார் செய்தாலும், தடுத்து விடுகிறார். எங்கள் பங்கை பெற்றுத் தர கோரி, தீக்குளிக்க வந்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
செந்தில்குமார் கூறியதாவது: கடந்த, 125 ஆண்டுகளுக்கு முன், நெசவுக்கு தேவையான பாவடி அமைக்க, 19 பேர் சேர்ந்து, பணம் போட்டு, இந்நிலத்தை வாங்கினர். தற்போது, அவர்களது வாரிசுகள் என, 300 பேருக்கு மேல் உரிமை கொண்டாடி வருகின்றனர். இவ்விடத்துக்காக டிரஸ்ட் ஏற்படுத்தி, நான் செயலராக உள்ளேன். முதலியார் சமூக பயன்பாட்டுக்காக, திருமண மண்டபம், வருவாய்க்காக, கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளோம்.
குற்றச்சாட்டு : இந்நிலத்தை, தனி நபர் உரிமை கொண்டாட முடியாது. தீக்குளிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள், என் பெரியப்பாவின் பேரன் முறையினர்.என்னிடம் பல முறை வந்து, பணம் கேட்டனர். 'இந்த இடத்துக்காக, பணம் தர இயலாது' என்றேன். இதன் மூலம், நான் எந்த வருவாயும் பெறவில்லை. கட்சி, சமூகத்தில் உயர்வாக உள்ளதால், குற்றம் சாட்டுகின்றனர். இவ்விடத்துக்கு, முறையான அனைத்து ஆவணங்களும் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jawaharr Kb - CHENNAI,இந்தியா
17-ஏப்-201812:52:13 IST Report Abuse
Jawaharr Kb 2011 இல் ஸ்டாலின் நன்றாக செயல் பட்டும், ரியல் எஸ்டேட், கட்ட பஞ்சாயத்து விவகாரத்தால் தான், தி மு க பதவிக்குக் வாராமல் போனது, திரு ஸ்டாலின் அவர்கள் இவைகளை முளையிலே கிள்ளி எரிய வேண்டும், இல்லையேல் தி மு க வின் மீது உள்ள பயமும், மக்கள் வோட்டு போடாயோசிப்பார்கள் ...
Rate this:
Share this comment
Cancel
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
17-ஏப்-201812:30:18 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN திருட்டு திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில், இது நடைமுறைக்கு வந்தது என்று சொன்னால் மிகையாகாது. ரௌடியிசம் மற்றும் மோசடி ஒன்றும் தி.மு.க விற்கு புதியது அல்ல.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஏப்-201807:26:40 IST Report Abuse
Bhaskaran யார் சொல்வது உண்மையென்னரு முறையான விசாரணைசெய்து குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் செய்யவேண்டும் அவர்கள் யாராக இருந்தாலும் சரி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை