ரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்?

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (69)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்?

சென்னை : ''ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்காததால், வங்கிகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது,'' என, அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலர், தாமஸ் பிராங்கோ தெரிவித்தார்.

சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: வங்கிகளின் வாரா கடன், ஒன்பது லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதில், 88 சதவீதம், 'கார்ப்பரேட்' நிறுவனங்கள் வாங்கியவை. அந்த கடனை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வாரா கடன் தொடர்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, இந்திய பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையை, ஆபத்திற்கு அழைத்து செல்வதாக உள்ளது.

பார்லிமென்ட் நிலைக்குழு, வாரா கடன் குறித்து, 2016 பிப்ரவரியில் கொடுத்த பரிந்துரைகளை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்வதில்லை.இதனால், வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து எடுத்த, 2,000 ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்கள், தட்டுப்பாடு காரணமாக, வீடுகளில் பத்திரப்படுத்தி விடுகின்றனர்.

2000 ரூபாய் நோட்டெல்லாம் எங்கே போனது?

இது, வங்கிகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்கிறது. பொதுத்துறை வங்கிகளின் நிர்வாக குழுவில், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பிரதிநிதியை, இடம்பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
17-ஏப்-201818:16:24 IST Report Abuse
jagan கர்நாடக தேர்தல் முடியட்டும் எல்லாம் சரியாயிடும்
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
17-ஏப்-201817:57:23 IST Report Abuse
Vijay D.Ratnam கன்டெய்னர்களில் கர்நாடகா பக்கம் ஒதுங்கியிருக்குமப்பா. இன்று இரவு முதல் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் மக்கள் தங்களிடம் உள்ள இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை முப்பது நாட்களுக்குள் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும், ஒரு லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் செலுத்துபவர்கள் வருமானவரித்துறையில் டிக்ளேர் செய்துவிட்டு வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும் ஒரு அறிவிப்பு வெளியானால் நன்றாக இருக்கும். பதுக்கல் பேர்வழிகளுக்கு, லஞ்ச பேய்களுக்கு, ஹவாலாகளுக்கு, அரசியல்வியாதிகளுக்கு அந்த இடத்தில் பச்சை மிளகாய் வைத்தது மாதிரி இருக்கும். நேர்மையான வழியில் சம்பாதித்தவர்களுக்கு சின்ன அசெளகர்யம்தான் பரவாயில்லை. நாட்டுக்காக பொறுத்துக் கொள்வோம்.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-ஏப்-201817:16:41 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அப்படியா>> நாளை நள்ளிரவுமுதல் இரண்டாயிரம் ரூபாய் செல்லாது என ஓர் அறிவிப்பு வரட்டும் அப்போ எல்லா ரெண்டாயிரம் நோட்டுகளும் வெளி வரும் .என்ன மானிடர்களோ . ஊழல் கரை படிந்த மேதாவிகளை சட்டத்தால் ஒன்றும் தண்டனை அளிக்கவே முடியாது பயமே இல்லை . நாட்டை இனி ராணுவம் ஆளனும் அப்போதான் சட்டத்தை மதிப்பார்கள் பயந்து நடப்பார்கள் போல் தெரிகிறது.????????
Rate this:
Share this comment
Cancel
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
17-ஏப்-201816:55:42 IST Report Abuse
GB.ரிஸ்வான் எல்லாம் நம்ம பிரதமர் நீரவ் மோடிகளுக்கு கொடுத்தனுப்பி விட்டார்
Rate this:
Share this comment
Cancel
த.இராஜகுமார் - tenkasi,இந்தியா
17-ஏப்-201816:24:28 IST Report Abuse
த.இராஜகுமார் மக்களை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும் மத்திய அரசு. மக்களுக்கு நிம்மதி இல்லாத அரசு
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
20-ஏப்-201808:22:37 IST Report Abuse
JIVANகுறைமதி உள்ள மக்களால் வந்த குறைமதி கொண்ட அரசு...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஏப்-201815:23:20 IST Report Abuse
Endrum Indian உரிய ஆவணமின்றி ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திச் செல்லப்பட்ட ரூ 1,100 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஏப்ரல் 17, 2018, 01:21 இதில் இருந்தவை 80 % ரூ 2000 நோட்டுக்கள், இந்த மாதிரி பல கடத்தல் நடந்திருக்கும் அதற்குத்தான் இந்த ரூ. 2000 திடீர் தட்டுப்பாடு, தெரிந்ததா ஆனந்தப்பூர் பெங்களூருக்கு தகுந்த ஆவணமின்றி தனியார் பஸ் மூலம் கொண்டு சென்ற ரூ 1,100 கோடி பறிமுதல். கர்நாடக சட்ட சபைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் (மே)12-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் தேர்தல் அலுவலகங்களை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில், வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்தது. போலீசார் அந்த பஸ்சில் சோதனை நடத்தினர். அப்போது பஸ்சில் தகுந்த ஆவணம் இன்றி ரூ.1,100 கோடி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த பணம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்து உள்ளது. அந்த பணத்தை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பணம் கர்நாடக சட்டசபை தேர்தலில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டதா அல்லது இது யார் பணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Vijay - Bangalore,இந்தியா
17-ஏப்-201814:09:13 IST Report Abuse
Vijay good move modi ji, please ban 2000 rs notes immediately ..
Rate this:
Share this comment
Cancel
baalaa - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201813:35:57 IST Report Abuse
baalaa இப்போ எல்லாம் BitCoin க்கு மாறிட்டாங்க ... இந்த மோடி என்ன வேணும்னாலும் பண்ணுவாருன்னு எல்லா அரசியல்வாதிகளும் கருப்பு பணத்தை பிட்காயினுக்கு மாத்திட்டாங்க ...
Rate this:
Share this comment
mukundan - chennai,இந்தியா
17-ஏப்-201815:18:00 IST Report Abuse
mukundanbitcoin இந்தியாவில் illegal என்பது உங்களுக்கு தெரியாதா?...
Rate this:
Share this comment
Cancel
V.Rajeswaran - chennai,இந்தியா
17-ஏப்-201812:18:13 IST Report Abuse
V.Rajeswaran வங்கி அதிகாரிங்க முதலில் ஒழுங்காக வேலை செய்யவும் அப்புறமா அரசை குறை சொல்லலாம் நாங்க எல்லோரும் வரிசையில் நிற்கும் பொது கள்ளத்தனமாக திருட்டு பசங்களுக்கு புது ரூபாய் நோட்டை எல்லாம் தூக்கி கொடுத்த மக்கள் விரோத கும்பல் தானடா நீங்க இப்போ வந்து நீதி நேர்மை வராக்கடன் அப்படினு கதை விடுறீங்க உனக்கு தற்போதைய அரசை குறை சொல்லணும் பெருசா வந்துட்டாரு போடா போய் வேலைய ஒழுங்கா பார்
Rate this:
Share this comment
R dhas - Bangalore,இந்தியா
17-ஏப்-201814:09:53 IST Report Abuse
R dhasவங்கி அதிகாரிங்க முதலில் ஒழுங்காக வேலை செய்வார்களா, என்று உறுதி செய்து விட்டு சாதக பதகங்கள் என்ன என்று ஆராய்ந்து விட்டு அரசு பணமதிப்பு நடவடிக்கையில் இரங்கியிருக்கலாம்.அப்படி சாத்தியமில்லை என்றால் இந்த நடவடிக்கையையே எடுத்திருக்ககூடாது.இந்தியாவில் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்ய முடியாது. காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.இங்குள்ள மக்கள் தொகை, ஏழை வசதி படைத்தோருக்கு உள்ள இடைவெளி ,கல்வி அறிவின்மை,பல்வேறு வேறுபாடுகள் போன்றவற்றை கணக்கில் கொள்ள வேண்டும்.ஒரே இரவில் பணமதிப்பு இழப்பு செய்து விட்டால் இந்தியாவே டிஜிட்டல் மயமாகி விடும்,கருப்பு பணத்தையெல்லாம் பிடித்துவிடலாம்,மக்கள் முன்னே தங்களை யோக்கியர்களாக திறமையானவர்களாக காட்டி கொள்லாம் என்று தப்பு கணக்கு போட்டு அவசர கதியில் எடுத்த நடவடிக்கையால் மக்கள் இன்னும் சிரமப்படுகின்றனர்........
Rate this:
Share this comment
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201814:38:36 IST Report Abuse
Bebetoசரியாக சொன்னீர். அரசியல்வாதி , அரசு ஊழியர், இவர்கள் எல்லோரையும் விட திமிர் பிடித்த திருட்டு கும்பல் - வாங்கி ஊழியர்களும், அதிகாரிகளும். இவர்கள் துணை இல்லையென்றால், மல்லையா, நீரவ் மோடி மற்றும் பல மோசடி பேர்வழிகள் உருவாகியிருக்க முடியாது.,...
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
17-ஏப்-201810:53:26 IST Report Abuse
christ ரிசர்வ் வங்கி, போதிய அளவுக்கு, 2,000 ரூபாய் நோட்டுகள் சப்ளை செய்வதில்லை.அப்படி என்றால் என்ன அர்த்தம் ? 2000 ரூபாய் நோட்டை நிறுத்துவதற்க்கான அறிகுறிகள் இவை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை