கட்டடம் விழுந்தது பெருச்சாளி காரணம்?| Dinamalar

கட்டடம் விழுந்தது பெருச்சாளி காரணம்?

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆக்ரா: உத்தர பிரதேசத்தில், மூன்றடுக்கு கட்டடம் இடிந்து விழுந்ததற்கு, பெருச்சாளிகள் காரணம் என, தெரிய வந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், ஆக்ராவில், பெருச்சாளிகளின் அட்டகாசம் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இங்குள்ள பல கட்டடங்களில், பெருச்சாளிகள் புகுந்து, கட்டடத்தின் ஸ்திரத்தன்மையை சேதப்படுத்தி வருகின்றன. ஆக்ராவின், மன்காமேஸ்வர் கோவில் அருகே, மூன்று அடுக்குமாடி கட்டடம், சமீபத்தில் பெய்த மழையால், பலவீனமடைந்து காணப்பட்டது. இதனால், அதன் உரிமையாளர், அங்கிருந்து காலி செய்தார். இதற்கடுத்த நாளே, அந்த கட்டடம் கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்தது. இதற்கு, பெருச்சாளிகள் தான் காரணம் என, தெரிய வந்துள்ளது. இந்த கட்டடத்தின் அடிப்பகுதிக்கு, பெருச்சாளிகள் சென்று, பைப் லைன் உள்ளிட்டவற்றை பலவீனப்படுத்தியதால், கட்டடம் இடிந்து விழுந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kodangi - Greenville,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)
17-ஏப்-201810:23:09 IST Report Abuse
kodangi தென்னகத்தை விட வடநாடு மக்களுக்கு என்றைக்குமே அறிவு திறன் குறைவு தான்......
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201803:00:51 IST Report Abuse
Mani . V உத்திர பிரதேசத்தில் மட்டும்தான் விந்தைகள் ஆயிரக்கணக்கில் நடைபெறும். குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் சாகடிக்கப்படும், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படும். இப்பொழுது கட்டிடம் இடிந்து விழ காரணம் "பெருச்சாளி". எல்லாம் அந்த யோகிக்கே வெளிச்சம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை