மண் அள்ளக்கூடாது ! பொதுப்பணித்துறை மறுப்பு :விவசாயிகள் மனம் வெறுப்பு| Dinamalar

தமிழ்நாடு

மண் அள்ளக்கூடாது ! பொதுப்பணித்துறை மறுப்பு :விவசாயிகள் மனம் வெறுப்பு

Updated : ஏப் 17, 2018 | Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மண் அள்ளக்கூடாது ! பொதுப்பணித்துறை மறுப்பு :விவசாயிகள் மனம் வெறுப்பு

அன்னுார்:அன்னுார் குளத்தில் மண் எடுக்க பொதுப்பணித்துறை மறுப்பு தெரிவித்ததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இது தொடர்பாக, கலெக்டரிடம் மனு அளித்த அவர்கள், அனுமதிக்க மறுத்தால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளனர்.தமிழக அரசு, பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கீழ் உள்ள குளம், குட்டைகளில், பொதுமக்கள், விவசாயிகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இலவசமாக மண் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்காக, அனைத்து தாலுகாக்களிலும், விவசாயிகள், பொதுமக்கள், உரிய ஆவணங்களுடன், தாசில்தாரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என கோவை கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இதையடுத்து, அன்னுார் தாசில்தார், தாலுகாவிலுள்ள குளம், குட்டைகளில், பாதிப்பு இல்லாமல் மண் எடுக்கலாமா, என கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறார்.இந்நிலையில், வருவாய் துறையின் கோரிக்கை கடிதத்திற்கு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுப்பியுள்ள பதிலில், அன்னுார் பெரிய குளத்தில் மண் எடுக்க அனுமதியில்லை என தெரிவித்துள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளின் இந்த எதிர்ப்பால், விவசாயிகள், அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அன்னுார் விவசாயிகள் கூறியதாவது:குளத்தில், குளக்கரைகளுக்கு பாதிப்பு இல்லாமல், மண் எடுக்கலாம். இதனால் மழை நீர் தேங்கும் பரப்பு, ஆழம் அதிகரிக்கும். குளத்தில் கிடைக்கும் வண்டல் மண்ணால், விவசாயிகளின் தோட்டத்திற்கு பயன் ஏற்படும். 40 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டுதான் குளங்களில் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஒரே மாதத்தில் மண் எடுக்க தடை விதிக்கப்பட்டது.இதனால், 90 சதவீத விவசாயிகள் மண் எடுக்கவில்லை. அதிகாரிகள், உரிய அளவுப்படி தான் மண் எடுக்கப்படுகிறதா என ஆய்வு செய்து கொள்ளலாம். விதிமுறையை மீறி மண் எடுத்தால் உடனே வாகனங்களை பறிமுதல் செய்யலாம். அபராதம் விதிக்கலாம்.
அதற்கு பதில், ஒட்டுமொத்தமாக அன்னுார் குளத்தில் மண் எடுக்கக்கூடாது என்று தடை விதிப்பது நியாயமல்ல.அன்னுார் குளத்தில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தோம். அனுமதி வழங்காவிட்டால், விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஏப்-201809:18:44 IST Report Abuse
Bhaskaran அதிகாரிகளை விவசாயிகள் கவனிக்கவேண்டும் அப்போதுதான் அனுமதி கிடைக்குமோ
Rate this:
Share this comment
Cancel
Vs rajan - Chennai,இந்தியா
17-ஏப்-201809:06:27 IST Report Abuse
Vs rajan அந்த ஒரு மாதத்திலேயே அதிக பட்ச மண் எடுக்கப்பட்டதோ என்னவோ? காரணம் தெரிவிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X