இடஒதுக்கீட்டை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய மந்திரி | Dinamalar

இடஒதுக்கீட்டை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய மந்திரி

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நரசிங்கபூர்: ம.பி.,யில், உயர் வகுப்பினர் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் பேசிய, அம்மாநில அமைச்சர், கோபால் பார்கவ், பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதை விமர்சித்து பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ம.பி.,யில், பா.ஜ.,வை சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தின் நரசிங்கபூர் மாவட்டத்தில், உயர் வகுப்பினர் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில், அம்மாநில சமூக நீதித்துறை அமைச்சர், கோபால் பார்கவ் பங்கேற்றார்.அப்போது அவர் பேசியதாவது:வசதி குறைந்தோருக்கு இட ஒதுக்கீடு அளித்தால் பரவாயில்லை. மாறாக, இடஒதுக்கீடு என்ற பெயரில், 90 சதவீத மதிப்பெண் பெறும் மாணவருக்கு பதில், 40 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவரை தேர்வு செய்வதால், நாட்டின் நலன் பாதிக்கப்படும்; இதை, பாரதமாதா மன்னிக்க மாட்டாள்.சுதந்திரம் பெற்றபோது, நாடு முழுவதும், நான்கில் ஒரு பங்கினர், உயர் வகுப்பை சேர்ந்த, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களாக இருந்தனர். அரசு வேலைகளில் பிராமணர்களே இருந்தனர். மாறாக, நம் சமுதாய மக்கள், தற்போது, 10 சதவீதம் கூட, இந்த பொறுப்புகளில் இல்லை. இதற்கு காரணம், முன்பு, நீதி அரசாண்டது. தற்போது, அநீதி அரசாள்கிறது.இவ்வாறு அவர் பேசினார்.இந்த பேச்சு, பிற்பட்ட சமுதாயத்தினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளை சேர்ந்தோர், அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, தன் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அமைச்சர், கோபால் பார்கவ், ''நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கூறினேன்; இது, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
17-ஏப்-201812:29:06 IST Report Abuse
R MURALIDHARAN நம் நாட்டில் உள்ளது இரு ஜாதிகள் ஒன்று இருக்கப்பட்டவன் மற்றொன்று இல்லத்தப்பட்டவன். இருக்கப்பட்டவன் எந்த ஜாதி எந்த மதமானாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
17-ஏப்-201808:16:31 IST Report Abuse
Darmavan பிற்படுத்தப்பட்டோர் என்ற போர்வையில் வசதி படைத்தவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
17-ஏப்-201807:31:13 IST Report Abuse
தேச நேசன் அமெரிக்காவிலும் ஆப்ரோ அமெரிக்கர்களெனும் கறுப்பர்கள் இன்னும் முன்னேறவில்லை ஆனால அவர்களுக்கு இடவொதுக்கீடு சலுகையே கிடையாது அவர்களும் போராடுவதில்லை ஒபாமா ஜனாதிபதியாக முடிந்ததே உண்மையில் தாழ்த்தப்பட்டோர் இடவொதுக்கீட்டை எதிர்ப்பது மிகவும் தவறு .ஆனால் பிற்பட்டோர் இடவொதுக்கீடு அயோக்கியத்தனம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X