ஏ.டி.எம்., வாசலில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., வாசலில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஏ.டி.எம்., வாசலில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே, சுவாமிமலையில், ஏ.டி.எம்., வாசலில் கேட்பாரற்று கிடந்த, 50 ஆயிரம் ரூபாயை, எடுத்த அரசு ஊழியர் ஒருவர் போலீசிடம் ஒப்படைத்தார்.தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை சன்னதி தெருவில் உள்ள ஸ்டேட் வங்கியின், ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் எடுக்க, துரைராஜ், 45, என்ற அரசு ஊழியர், நேற்று முன்தினம் மாலை சென்றார்.
அறிவுறுத்தல் : அப்போது, ஏ.டி.எம்., வாசலில், 500 ரூபாய் கட்டு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த துரைராஜ், சிறிது நேரம் அங்கேயே இருந்து, பணத்தை தவற விட்டவர்கள் வருகின்றனரா என்று பார்த்துள்ளார். யாரும் வரவில்லை. இதையடுத்து, பணத்துடன் வீட்டுக்கு சென்ற துரைராஜ், நேற்று காலை, ஸ்டேட் வங்கியின் கிளை திறந்ததும், வங்கி மேலாளர் முகுந்தனிடம், ஏ.டி.எம்., வாசலில் எடுத்த, 49 ஆயிரத்து, 500 ரூபாயை ஒப்படைத்தார். அந்த பணம், வங்கிப் பணம் இல்லை என்பதால், அதை போலீசில் ஒப்படைக்கும்படி, வங்கி மேலாளர் அறிவுறுத்தினார். எழுத்தர் பின், சுவாமிமலை காவல் நிலையம் சென்ற, துரைராஜ், சம்பவத்தை சொல்லி, பணத்தை ஒப்படைத்தார். கேட்பாரற்று கிடந்த பணத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த துரைராஜை பொதுமக்களும், போலீசாரும் பாராட்டினர். இவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் எழுத்தராக பணியாற்றுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar KR - Chennai,இந்தியா
18-ஏப்-201809:58:27 IST Report Abuse
Sekar KR ATM மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தவறவிட்டவர் யார் என்று கண்டுபிடிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Joe - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201815:51:24 IST Report Abuse
Joe துரைராஜ் ஒரு நல்ல மனிதர் அவருடைய குடும்பம் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள். இதுல போலீஸ்காரங்க பங்கு போட்டுவிட கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
17-ஏப்-201813:22:27 IST Report Abuse
Viswanathan அரசு துறையில் ஒரு மாமனிதர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X