அப்பல்லோவில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை: பன்னீர் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அப்பல்லோவில் ஜெ.,வை பார்க்கவில்லை: பன்னீர்

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (18)
Advertisement
அப்பல்லோவில் ஜெ.,வை பார்க்கவில்லை: பன்னீர்

சென்னை: ''அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட பின், அவர் உயிரோடு இருந்த வரை நான் பார்க்கவில்லை,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார்.
இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி: நல்ல முடிவு அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் தொடர்பாக, மத்திய அரசு சட்டம் இயற்றியது. அதை பின்பற்றி, அனைத்து மாநிலங்களிலும், சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும், சட்டம் இயற்றப்படவில்லை. இது குறித்து முடிவு செய்ய, கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்ததும், நல்ல முடிவு எடுக்கப்படும். காவிரி பிரச்னையில், வரலாற்று பிழை செய்த கட்சிகள், தி.மு.க.,வும், காங்கிரசும். இன்று, அக்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும், தமிழக மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். பொறுப்புள்ள அரசு, எதை செய்ய வேண்டுமோ, அதை நாங்கள் செய்து வருகிறோம். அரசியல் ஆதாயத்திற்காக, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. விரைவில், சட்டசபை கூட்டப்படும். தேதியை, சபாநாயகர் அறிவிப்பார். சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட பின், அவர் உயிரோடு இருந்த வரை, நான் பார்க்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் சேவை : முன்னதாக, சென்னையில், நேற்று நடந்த, ஓய்வூதியர்களுக்கு அடையாள அட்டை, தணிக்கையாளர்களுக்கு, 'லேப் டாப்' வழங்கும் விழாவில், துணை முதல்வர் பேசியதாவது: ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு, அடையாள அட்டை வழங்கும் திட்டம், செயலாக்கத்திற்கு வந்துள்ளது. திட்டத்தின் துவக்கமாக, 16 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும், 7.32 லட்சம் பேருக்கு, அடையாள அட்டை வழங்கப்படும். அடையாள அட்டையில், புகைப்படம், ஓய்வூதிய அனுமதி எண், பெயர், பிறந்த தேதி, பணி ஓய்வுபெற்ற தேதி, 'ஆதார்' எண், மொபைல் போன் எண், இ - மெயில் முகவரி, என, 16 வகையான விபரங்கள் இடம்பெற்றுள்ளன.ஜெ., வழியில், அனைத்து துறைகளிலும், அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பணிகள் திறம்பட நடைபெற, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டு, அதை செயல்படுத்த, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அரசுப் பணியாளர்கள், தங்கள் பணியை, தொடர்ந்து செம்மையாக செய்ய வேண்டும். நவீனமயமாகி வரும், உலக நடைமுறைகளுடன், தங்களை இணைத்து, மக்களுக்கு சிறந்த சேவையை, விரைவாக அளிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் நலனுக்கான பணிகளையும், திட்டங்களையும், அரசு தொடர்ந்து நிறைவேற்றும்.இவ்வாறு பன்னீர்செல்வம் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஏப்-201814:21:35 IST Report Abuse
தமிழ்வேல் சசி சொன்னதுபோல செய்து வந்தார்.. அதனால் மட்டுமே முதல்வராக இருந்தார்.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஏப்-201801:29:25 IST Report Abuse
Mani . V இந்த தர்மயுத்தர் "அம்மாவை பார்த்தேன்" என்று சொன்னதெல்லாம் பொய்தானே? பொய்யிலே பிறழும் இவருக்கு பெயர் "தர்மயுத்தராம்". கேப்டன் பாணியில் சொல்வதென்றால் "இதெல்லாம் எவ்வளவு கேவலம் தெரியுமா?". (தர்மயுத்தரே, என் காதில் மட்டும் "ஜெயலலிதா எப்பொழுது சாகடிக்கப்பட்டார்?" என்று சொல்லுங்களேன். ஏனென்றால் உங்களுக்கு அதில் சம்பந்தம் இருக்கிறது).
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
29-ஏப்-201814:18:58 IST Report Abuse
தமிழ்வேல் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பன்னீர்....
Rate this:
Share this comment
Cancel
ramasamy naicken - Hamilton,பெர்முடா
18-ஏப்-201800:50:05 IST Report Abuse
ramasamy naicken பொய் பேச, பேச பன்னீருக்குத்தான் அது ஆப்பில் போய் முடிய போகின்றது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை