அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி தண்ணீர் திறப்பு! அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை| Dinamalar

தமிழ்நாடு

அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி தண்ணீர் திறப்பு! அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி தண்ணீர் திறப்பு! அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை

மதுரை : கேரளாவில் பெரியாறு அணைப்பகுதியில் கோடை மழை பெய்வதால்,மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு அணையை திறக்கலாம், என பொதுப்பணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று 11410 அடி. நீர்வரத்து 406 கனஅடி. வெளியேற்றம் 600 கனஅடி. இந்த நீர் வைகை அணைக்கு 249 கனஅடி வருகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 33.79 அடி. கடந்தாண்டு இதே நாளில் 24.38 கனஅடி மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டை விட 9.41 அடி கூடுதலாகவுள்ளது. மேலும் இந்தாண்டு ஆங்காங்கே கோடை மழை பெய்கிறது. கோடையில் நீர் தட்டுப்பாடு ஏற்படாமல் சமாளிக்கலாம் என மதுரை மாநகராட்சி நம்பிக்கை கொண்டுள்ளது.

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் தொட்டி கட்டப்பட்டு, லாரி தண்ணீரில் அழகர் இறங்க ஏற்பாடு நடக்கிறது. தற்போது கோடை மழையும், பெரியாறு அணையில் இருந்து நீர் வரத்து உள்ளதாலும், இந்நிகழ்ச்சிக்காக வைகை அணையை மூன்று நாட்கள் திறக்க மாநகராட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஏப்., 27 அணை திறக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை