'ஸ்காலர்ஷிப்' திட்டத்தால் காஷ்மீர் மாணவர்கள் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'ஸ்காலர்ஷிப்' திட்டத்தால் காஷ்மீர் மாணவர்கள் மாற்றம்

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Kashmir,காஷ்மீர்

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு, மத்திய அரசால் அளிக்கப்படும், 'ஸ்காலர்ஷிப்' திட்டம், அம்மாணவர்களின் போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாணவர்கள், உயர் கல்வி கற்க, பி.எம்.எஸ்.எஸ்.எஸ்., எனப்படும், பிரதமர் சிறப்பு கல்வி நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், 'மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்' நிறுவனம் ஆய்வு நடத்தியது.

அந்த ஆய்வு முடிவுகள் விபரம்: மத்திய அரசால் அளிக்கப்படும், நிதி உதவி திட்டம், ஜம்மு - காஷ்மீர் மாநில மாணவர்களின் போக்கில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கல்வி உதவி தொகை பெறும் மாணவர்களில் பெரும்பாலோர், வெளி மாநிலங்களுக்கு சென்று, மேல் படிப்பு படிக்கவும், வேலை செய்யவும் தயாராக உள்ளனர்.

ஜம்மு - காஷ்மீருக்கு வெளியே வசிக்கும்போது, தங்களின் அறிவுத்திறன், பிற மாநிலங்களின் மக்களுடன் அனுசரித்து போகும் தன்மை அதிகரிப்பதாக, அம்மாநில மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சில மாணவர்கள், மொழி பிரச்னையால், சில மாநிலங்களில் வசிப்பது சிரமமாக இருந்ததாக கூறியுள்ளனர். இவ்வாறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

வெளிமாநிலங்களுக்கு சென்று படிக்க விரும்பும், ஜம்மு - காஷ்மீர் மாநில மாணவர்களுக்கு, அளிக்கப்படும் சிறப்பு நிதி உதவி திட்டத்தின் கீழ், விடுதி கட்டணமாக, ஆண்டுக்கு, 90 ஆயிரம் ரூபாய், எழுதுபொருள், புத்தகம் வாங்குவதற்கான செலவு தொகையாக, ஆண்டுக்கு, 10 ஆயிரம் ரூபாய் தரப்படுகிறது. கல்வி கட்டணமாக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
poonguzhali - singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201820:54:51 IST Report Abuse
poonguzhali I wish the scheme to succeed beyond obstacles and to have united India through mind too.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஏப்-201815:59:14 IST Report Abuse
Endrum Indian "ஜம்மு - காஷ்மீருக்கு வெளியே வசிக்கும்போது, தங்களின் அறிவுத்திறன், பிற மாநிலங்களின் மக்களுடன் அனுசரித்து போகும் தன்மை அதிகரிப்பதாக, அம்மாநில மாணவர்கள் தெரிவித்துள்ளனர்". இதைப்படித்த இமாம்கள், முல்லாக்கள் இந்த மாதிரி மாணவர்கள் மீது உடனே பாத்வா ஹராமி என்று கொண்டு வர முடிவு செய்துள்ளார்கள் என்று விரைவில் செய்தி வரும்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201814:09:17 IST Report Abuse
Pasupathi Subbian மத்திய அரசு அறிவித்துள்ள பல சலுகைகளை , மாநில அரசுகள் மக்களுக்கு கொண்டுசேர்ப்பதே இல்லை.அதிலும் சில மாநிலங்களில் மத சார்பான, அல்லது தங்களுக்கு சாதகமான விஷயங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதும், மக்கள் நலனை புறக்கணிப்பதும் , இதனால் மத்திய அரசை குறைகூறும் வேலையை மட்டுமே செய்விக்கப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தமட்டில், நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போராட்டம், பி ஜெ பியை மட்டுமே குறிவைத்து எதிர்த்து நடத்தப்படும் போராட்டமாக தெரிகிறது. இதில் வன்முறையை தூண்டும் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு உள்ளன. மத்திய அரசு அறிவித்த சர்வோதய பள்ளிகளை புறக்கணித்தது தமிழக அரசு, அதே போல நீட் தேர்வை ரத்து செய்ய , திட்டமிடப்பட்ட போராட்டம், வன்முறை அவிழ்த்து விடப்பட்டன
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X