ஸ்டெர்லைட் 'டீல்' பேச முயன்றது : பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் 'டீல்' பேச முயன்றது : பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துாத்துக்குடி: ''ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து ஆரம்பத்தில் இருந்து போராடினேன். ஆலை தரப்பில் என்னிடம் டீல் பேசினர்,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.துாத்துக்குடியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்தப் பின் அவர் பேசியதாவது:ஸ்டெர்லைட் ஆலை வருவதற்கு முன், நான்கு நாட்கள் உண்ணாவிரதம் இருந்தேன். ஆனால் மக்கள் ஆதரவு தரவில்லை. அதனால் ஆலை எளிதாகத் தொடங்கப்பட்டுவிட்டது. அப்போது அந்த ஆலை தரப்பில் என்னிடம் டீல் பேசினர். தேர்தல் செலவுக்காக எனக்கு பணம் கொடுத்தபோதும் அதை மறுத்தேன். ஸ்டெர்லைட் ஆலையுடன் ஊசி முனை அளவுகூட எனக்குத் தொடர்பு கிடையாது.தி.மு.க, அ.தி.மு.க., மற்றும் மத்தியில் இருந்த காங்., அரசுகளே இந்த ஆலை இயங்க ஒப்புதல் அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உண்மையான பிரச்னை என்ன என்பதை மாநில அரசு கண்டுபிடிக்க வேண்டும். மக்களின் கவலையைப் பற்றியும் அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
17-ஏப்-201812:12:04 IST Report Abuse
pradeesh parthasarathy thaangal kooriyathu unmai yentraal vaazhththukkal ....
Rate this:
Share this comment
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
17-ஏப்-201810:37:58 IST Report Abuse
R. Vidya Sagar இருபது வருடங்கள் கழித்து இந்த தகவலை இப்பொழுது ஏன் வெளியிட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X