பல்கலை அலுவலர்கள் வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பல்கலை அலுவலர்கள் வழக்கு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: அண்ணாமலை பல்கலை அலுவலர்கள் தாக்கல் செய்த வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.அருப்புக்கோட்டை விவேகன் உட்பட 70 பேர் தாக்கல் செய்த மனு:சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்களாக பணிபுரிகிறோம். பல்கலையை தற்போது தமிழக அரசு நிர்வகிக்கிறது. பல்கலை நிதி பிரச்னையை சமாளிக்க, உபரி ஊழியர்களை வேறு துறைகளுக்கு அயல் பணிக்கு அனுப்ப குழு பரிந்துரைத்தது. 2017 ஏப்.,28 ல் உயர்கல்வித்துறை, 'தனி அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள் 798 பேர் உபரியாக உள்ளனர்,' என உத்தரவிட்டது. இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும். பணி நிபந்தனைகள் மாற்றம் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் பல்கலை சிண்டிகேட் குழுவிற்குத்தான் உள்ளது. அரசுக்கு அதிகாரம் இல்லை. வேறு துறைகளுக்கு மாற்றினால் தற்போது பெறும் சம்பளத்தை குறைக்கக்கூடாது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார்,'பணி நிபந்தனைகளில் எந்த மாற்றம் செய்தாலும், அது வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாக அமையும்,' என்றார். உயர்கல்வித்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி 4 வாரங்கள் ஒத்திவைத்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை