மீண்டும் முளைக்குது ஆக்கிரமிப்பு| Dinamalar

தமிழ்நாடு

மீண்டும் முளைக்குது ஆக்கிரமிப்பு

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மீண்டும் முளைக்குது ஆக்கிரமிப்பு

திருவான்மியூர்: திருவான்மியூர் சந்தைக்கு வெளியே, நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள், மீண்டும் முளைக்கத் துவங்கி உள்ளன.அடையாறு மண்டலம், திருவான்மியூர், மருதீஸ்வரர் கோவிலின் எதிரில், கோவிலுக்கு சொந்தமாக, தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. வாகனங்கள்அங்கு, 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இவற்றிற்கான வாடகை, அறநிலையத் துறையால் வசூலிக்கப்பட்டு வருகிறது.சந்தையின் முன்பகுதியில், நடைபாதையை ஆக்கிரமித்து, 20க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதேபோல், சந்தைக்கு வருவோரும், வாகன நிறுத்துமிடம் இல்லாததால், தங்கள் வாகனங்களை, சந்தைக்கு வெளியிலேயே நிறுத்தினர்.இதனால், கடைகளுடன், வாகனங்களும் சேர்ந்து, சாலையை ஆக்கிரமித்ததால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்த, மாநகராட்சி அதிகாரிகள், பிப்., 13ல், போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும், சந்தைக்குள்ளேயே, தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக, நடைபாதையில் அகற்றப்பட்ட கடைகள், மீண்டும் முளைக்கத் துவங்கி உள்ளன. வாழ்வாதாரம்வாடிக்கையாளர்களின் வாகனங்களும், சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பாளர்களில் பலர், கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள். அவர்களுக்கு, மாற்று இடம் வழங்க, அறநிலையத் துறை அதிகாரிகள் மறுக்கின்றனர். 'அதனால், அவர்களும் வாழ்வாதாரத்திற்காக, எச்சரிக்கையை மீறி, கடைகள் அமைப்பது தொடர்கிறது. போக்குவரத்து நெரிசலும் தொடர்கிறது' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
18-ஏப்-201808:20:35 IST Report Abuse
Darmavan எவன் ஆக்கிரமித்தாலும் அது சட்ட மீறல்.இவர்கள் ஏழை இரு சொல்வதெல்லாம் ஏமாற்றுவார்த்தை. இவர்களிடம் மாமூல் வாங்கும் நாய்கள்தான் இந்த மாதிரி இதை கிளப்பிவிடுகின்றன.எல்லாரும் லக்ஷதிபதிகள் ஏழை வேஷம் போடும் திருடர்கள் ..வாழ்வாதாரம் என்பதற்காக நாடு ரோடில் கடை போடலாமா? ஆயோகித்தனமான வாதம். இதில் போலீஸ் திருடர்களும் உடந்தை மாமூலுக்காக..இதே போல் மயிலாப்பூர் கபாலி கோயில் குளத்தை சுற்றி கடைகள் மக்கள் ரோடில் இறங்கி நடக்கவேண்டிய அவல நிலை.இந்த ஆக்கிரமிப்புகள் தயவு தாட்சண்யமின்றி அகற்றப்படவேண்டும்.செய்யாவிடில் அந்த ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தண்டிக்கப்படவேண்டும்.அப்போது சரியாகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel
அசோக் வளன் - Chuan Chou,சீனா
17-ஏப்-201816:06:29 IST Report Abuse
அசோக் வளன் உங்களை பொறுத்தவரை ஆக்கிரமிப்பு என்பது ஏழைகள் வைக்கும் நடை பாதை கடைகள் தான் ... அரசு நிலம் ஆக்கிரமிப்பு , குளம் , குட்டை , ஆறு , ஏறி போன்றவைகள் ஆக்கிரமித்தால் ஒரு பேட்டி செய்தி கூட வருவதில்லை ....
Rate this:
Share this comment
Manian - Chennai,இந்தியா
18-ஏப்-201803:00:11 IST Report Abuse
Manianஒரு சிலர் பல இடங்களை ஆக்கிரமிப்பது அரசியல், பலர் ஒரு சில இடங்களை ஆக்கிரமிப்பது மக்கள் இயல்- ஆலமரத்தடி அன்னாசி பண்டாரம்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-ஏப்-201809:32:36 IST Report Abuse
Srinivasan Kannaiya முளைக்கும் பொழுதே கிள்ளி எறியவேண்டும்... முளைத்த பிறகு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை