இரண்டாவது வேட்பாளர் பட்டியல் : பதுங்கிய பா.ஜ., தலைவர்கள்| Dinamalar

இரண்டாவது வேட்பாளர் பட்டியல் : பதுங்கிய பா.ஜ., தலைவர்கள்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பா.ஜ.,வின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு, 72 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை, பா.ஜ., ஏற்கனவே அறிவித்திருந்தது. இரண்டாம் கட்ட வேட்பாளர் தேர்வு தொடர்பாக, டில்லியிலுள்ள, பா.ஜ., அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில், தேர்தல் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.பிரதமர் நரேந்திர மோடி, மாநில மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாஷ் ஜாவடேகர், சுஸ்மா சுவராஜ், அனந்தகுமார், மாநில தலைவர் எடியூரப்பா, தேசிய ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் உட்பட, தேர்தல் கமிட்டியின் உறுப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.மாலை, 6:00 மணிக்கு துவங்கிய கூட்டம், இரவு, 9:00 மணி வரை நீடித்தது. இரண்டாம் கட்டமாக, 80 முதல், 100 வேட்பாளர்கள் அறிவிப்பதற்கு தயாரான பா.ஜ., நேற்று இரவு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டிலை வெளியிட்டதும், தன் முடிவை ஒத்தி வைத்ததாக தெரிகிறது.இதனால், இரண்டாவது பட்டியல் இன்று காலையில் வெளியிடப்படுமென தெரிகிறது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை