தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வரின் கனவு...தகர்ந்தது! : பெங்களூரு சி.வி.ராமன்நகரில் தமிழருக்கு வாய்ப்பு - 218 வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு| Dinamalar

தோல்வி பயத்தில் இருக்கும் முதல்வரின் கனவு...தகர்ந்தது! : பெங்களூரு சி.வி.ராமன்நகரில் தமிழருக்கு வாய்ப்பு - 218 வேட்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தோல்வி பயத்தால், இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் முதல்வர் சித்தராமையாவின் கனவு தகர்ந்துள்ளது. பெங்களூரின், சி.வி.ராமன் நகர் தொகுதியில், மேயர் சம்பத்ராஜு உட்பட, 218 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்; ஆறு தொகுதிகளுக்கு இழுபறி நீடிக்கிறது. கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தொடர்பாக, 9ம் தேதி முதல், அக்கட்சி மேலிட தலைவர்கள், டில்லியில் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்தனர். ஆனால், வேட்பாளர்களை இறுதி செய்ய முடியவில்லை.மேற்பார்வை குழு, தேர்தல் கமிட்டி, ராகுல் தலைமையிலான மேலிட குழு என, பல கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இறுதியாக நேற்று மாலை, 3:00 மணிக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு, 8:35 மணிக்கு தான் பட்டியல் வெளியிடப்பட்டது.முதலில், 224 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என்று கூறி, கடைசியில், 218 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.மைசூரு, சாமுண்டீஸ்வரியில் தோல்வி பயத்தால், பாகல்கோட்டையின் பாதாமி தொகுதியின் தற்போதைய, எம்.எல்.ஏ., சிம்மனகட்டியை அழைத்து சரிக்கட்டி, இரண்டு தொகுதிகளிலும் களமிறங்க, முதல்வர் சித்தராமையா முடிவு செய்திருந்தார்.ஆனால், லோக்சபா தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில எம்.பி.,க்கள் கே.எச்.முனியப்பா, வீரப்ப மொய்லி ஆகிய மூத்த தலைவர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, இரண்டு தொகுதிகளில் முதல்வர் களமிறங்க, மேலிட தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. சாமுண்டீஸ்வரியில் மட்டுமே போட்டியிடுவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதால், முதல்வரின் கனவு தகர்ந்துள்ளது.இதே போன்று, முதல்வரின் நெருங்கிய நண்பரும், பொதுப்பணித் துறை அமைச்சருமான மஹாதேவப்பாவின் மகன் சுனில் போஸுக்கு, பெங்களூரு சி.வி.ராமன் நகர் தொகுதி வழங்கப்படவில்லை. அதே வேளையில், சித்தராமையாவின் மகன் யதீந்திராவுக்கு, வருணா தொகுதி கிடைத்துள்ளது. ராஜாஜி நகரில், முன்னாள் மேயர் பத்மாவதிக்கும்; தங்கவயலில், எம்.பி., கே.எச்.முனியப்பாவின் மகள் ரூபா சசிதருக்கும்; கோலாரில், சையத் ஜமிர் பாஷாவுக்கும்; மகாலட்சுமி லே - அவுட்டில், காங்கிரஸ் மாணவர் பிரிவு மாநில தலைவர் எச்.எஸ்.மஞ்சுநாத்துக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மல்லேஸ்வரத்தில், புள்ளியியல் துறை அமைச்சர் எம்.ஆர்.சீதாராமுக்கும்; ஜெயநகரில், உள்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி மகள் சவும்யாவுக்கும்; சென்னபட்டணாவில், போக்குவரத்து துறை அமைச்சர் ரேவண்ணாவுக்கும் டிக்கெட் கிடைத்துள்ளது.டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்காத நடிகர் அம்பரிஷ், மாண்டியாவில் போட்டியிடுவதற்கு மேலிடமே டிக்கெட் வழங்கியுள்ளது.ம.ஜ.த.,விலிருந்து விலகி, காங்கிரசில் இணைந்த ஏழு பேருக்கும், காங்கிரசில் இணைந்த, சுயேச்சை அசோக் கேனிக்கு டிக்கெட் கிடைத்துள்ளது.பெங்களூரின் சாந்திநகர், விஜயபுராவின் நாக்தான், சிந்தகி, மாண்டியாவின் மேலுகோட்டை, பெலகாவியின் கித்துார், ராய்ச்சூர் ஆகிய ஆறு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.இதனால், அத்தொகுதி போட்டியிட டிக்கெட் கேட்டுள்ள முக்கிய தலைவர்கள், இறுதிக்கட்ட, 'லாபி'யில் ஈடுபட்டுள்ளனர்.மற்றொரு புறம், பட்டியல் வெளியான உடன், ஹாவேரி, சிக்கமகளூரு, தாவணகரே, துமகூரு, பாதாமி, கோலார் உட்பட, மாநிலத்தின் பல பகுதிகளிலும், டிக்கெட் கிடைக்காமல் அதிருப்தியடைந்துள்ள பலரும், போராட்டம் நடத்த துவங்கினர்.ஒரு சில இடங்களில் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, சாலைகளில் டயர்களுக்கு தீ வைத்து, அவருக்கு எதிராக கோஷமெழுப்பி, காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.தமிழர்களுக்கு டிக்கெட் வழங்க கோரி, முதல்வரையும், மேலிட தலைவர்களையும், பலரும் வலியுறுத்தி வந்தனர். பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த, சி.வி.ராமன் நகர் தொகுதி, தமிழரான பெங்களூரு மேயர் சம்பத்ராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது போலி பட்டியல் : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதமான நிலையில், அக்கட்சி மேற்பார்வை குழு தலைவர் மதுசூதன் கையெழுத்திட்டதாக, 205 பேர் போலி பட்டியல், இரவு, 7:15 மணிக்கு சமூக வலைதளங்களில் பரவியது. ஏற்கனவே ஒரு முறை போலி பட்டியல் வெளியான நிலையில், இரண்டாவது முறையாக நேற்றிரவும் போலி பட்டியல் வெளியானதால், காங்கிரஸ் தொண்டர்களிடையே குழப்பம் ஏற்பட்டது.இதையடுத்தே, அவசர அவசரமாக அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டது.
தாமதம் ஏன்? : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை, 3:00 மணிக்கு ளியிடப்படுவதாக, முதலில் அறிவிக்கப்பட்டது. முதல்வரின் ஆதரவாளர்களான புலிகேசிநகர் அகண்ட சீனிவாசமூர்த்தி, பீதரின் அசோக் கேனி, பொதுப்பணித்துறை அமைச்சர் மஹாதேவப்பா மகன் சுனில் போஸ் ஆகியோருக்கு டிக்கெட் வழங்க, பல மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இவர்களுக்கு, முதல்வர் சித்தராமையா வக்காலத்து வாங்கினார். இறுதியில், சுனில் போசுக்கு மட்டும் டிக்கெட் கிடைக்கவில்லை.
முதல்வர் அவசர ஆலோசனை : வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன், மாநில மேலிட பொறுப்பாளர், கே.சி.வேணுகோபால், மாநில தலைவர், ஜி.பரமேஸ்வர், முதல்வர் சித்தராமையா, செயல் தலைவர், தினேஷ் குண்டுராவ், அமைச்சர்கள், டி.கே.சிவகுமார், மஹாதேவப்பா ஆகியோர் பெங்களூரு திரும்பினர். முதல்வர் இல்லத்தில் அனைவரும் அவசர ஆலோசனை நடத்தினர்.டிக்கெட் கிடைக்காதவர்களை சமாளிப்பது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை