கூடுதல் செலவில் நீர் குழாய் திட்டம் தி்ணிப்பு!. வேளாண் அலுவலர்களுக்கு நெருக்கடி| Dinamalar

தமிழ்நாடு

கூடுதல் செலவில் நீர் குழாய் திட்டம் தி்ணிப்பு!. வேளாண் அலுவலர்களுக்கு நெருக்கடி

Added : ஏப் 17, 2018
Advertisement
கூடுதல் செலவில் நீர் குழாய் திட்டம் தி்ணிப்பு!. வேளாண் அலுவலர்களுக்கு நெருக்கடி

கடலுார்: வேளாண் துறை சார்பில் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர் குழாய் தொழில் நுட்ப திட்டத்தில் பெரும் முறைகேடு நடப்பதால், அலுவலர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
விவசாயிகள் நெல் வயலில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெரும் வகையில் வேளாண் துறை சார்பில் நீர் குழாய் தொழில் நுட்பம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இதற்காக 6 அங்குலம் விட்டமுடைய ஒரு அடி நீளமுள்ள பிளாஸ்டிக் பைப்பில் அரை அடிக்கு சிறு துளையிட்டு, துளையுள்ள பகுதி நெல் வயலில் குழி தோண்டி புதைத்து, குழாய் நடுவில் உள்ள மண்ணை எடுத்து விடவேண்டும். வயலில் உள்ள தண்ணீர் கசிந்து குழாயில் தேங்கும். குழாயில் தண்ணீர் வரண்டால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
இந்த தொழில் நுட்பம் கடலுார் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு குழாய் ஜி.எஸ்.டி., சேர்த்து 125 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 53 ரூபாய் மானியம் போக 72 ரூபாய் விவசாயிகளிடம் வசூலிக்கப்படுகிறது. 45 ரூபாய் விலை கொண்ட பிளாஸ்டிக் பைப்பை 72 ரூபாய் கொடுத்து வாங்க விவசாயிகள் எவரும் முன்வராததால், அதனை விற்க முடியாமல் வேளாண் அலுவலர்கள் திண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், நீர் குழாய் ஒப்பந்தத்தை எடுத்த நிறுவனம், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வேளாண் விரிவாக்க மையங்களுக்கும் ஆயிரம், 2000 குழாய்களை அனுப்பி வைத்துவிட்டு, 15 ஆயிரம், 20 ஆயிரம் குழாய்கள் வாங்கியது போல் பில் மற்றும் அதற்கான மத்திய அரசின் மானியத் தொகைக்கு பரிந்துரை கடிதம் வழங்குமாறு வேளாண் அலுவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது.
குழாயை அனுப்பாமலேயே, மாவட்டத்தில் 2 லட்சம் குழாய்கள் விற்றதாக கணக்கு காட்ட சொல்வதை அறிந்த வேளாண் அலுவலர்கள் நமக்கேன் சிக்கல் என ஒதுங்க முயல்கின்றனர்.ஆனால், அதிகாரிகளோ இது மேலிடத்து விவகாரம் என கூறி அலுவலர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் மீண்டும் ஒரு முத்துகுமாரசாமி சம்பவம் நடந்து விடுமோ என்ற அச்சம் வேளாண் அலுவலர்கள் மத்தியில் உலவி வருகிறது.
விபரீதம் நடக்கும் முன் உயர் அதிகாரிகள் விழித்துக் கொள்ள வேண்டும் என வேளாண் துறை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து வேளாண் இணை இயக்குனரிடம் கேட்டபோது, 'இத்திட்டத்திற்கான மானியத் தொகை கடந்த மாதம் முழுவதுமாக பெறப்பட்டு வங்கி கணக்கில் உள்ளது. கம்பெனி நிர்வாகம் வழங்கிய குழாய்களில் விற்பதற்கேற்ப மானியத் தொகை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை