தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முன்னேற்பாடு: விபரங்கள் சேகரித்து பட்டியல் தயாரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் பிரச்னையை சமாளிக்க முன்னேற்பாடு: விபரங்கள் சேகரித்து பட்டியல் தயாரிப்பு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஊராட்சிகளில் வறண்ட போர்வெல்கள், தினமும் ஒவ்வொரு பகுதிக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிபாளையம் ஒன்றியத்தில், 15 ஊராட்சிகளில், 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் ஆற்று தண்ணீரும், நிலத்தடி தண்ணீரும் மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால், குறிப்பிட்ட நாட்களில் மட்டும் வினியோகிக்கப்படுகிறது. அதேபோல், நிலத்தடி நீரும் பற்றாக்குறையாக உள்ளது. கோடைகாலம் என்பதால், நாளுக்குநாள் தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்கும் வகையில், உள்ளாட்சி அதிகாரிகள், தற்போது செயல்படாத போர்வெல் மற்றும் தற்போது வழங்கப்பட்டு வரும் தண்ணீரின் அளவு போன்ற விபரங்களை சேகரித்து, பட்டியல் தயாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, பள்ளி பாளையம் ஊராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அனைத்து பஞ்சாயத்துகளில், ஒவ்வொரு பகுதியிலும், தற்போது ஆற்றுதண்ணீர் மற்றும் நிலத்தடி நீர் வழங்கப்படும் விபரங்கள், மேலும் செயல்படாத போர்வெல்கள் எத்தனை உள்ளன. கோடைகாலத்தில் தண்ணீர் பிரச்னை ஏற்படுமா, பற்றாக்குறையை போக்க வழிமுறைகள், போன்ற விபரங்களை சேகரித்து, ஆய்வு செய்து பட்டியல் தயாரித்து வருகிறோம், வரும், 20க்குள் உயரதிகாரிகளுக்கு அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை