அரசு பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர், நாமக்கல் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார். செயலாளர் துரைராஜ், மாநில துணைத் தலைவர் ரவீந்திரன், அகில இந்திய மாநில அரசு பணியாளர் மகா சம்மேளன தேசிய குழு உறுப்பினர் தம்பிராஜா ஆகியோர், கோரிக்கை பேசினர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்கம் மற்றும் சுகாதாரத்துறை அரசு பணியாளர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை