'மாஜி' கவுன்சிலரை குத்திய வளையல் வியாபாரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' கவுன்சிலரை குத்திய வளையல் வியாபாரி கைது

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்செங்கோடு: முன்னாள் கவுன்சிலரை, கத்தியால் குத்தியவர், கைது செய்யப்பட்டார். திருச்செங்கோடு, சின்னபாலூத்து தெருவை சேர்ந்தவர் கந்தசாமி, 58. இவர், 33வது வார்டு அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர். இவருக்கும், நாற்பது கால்மண்டபம் அருகே பிளாஸ்டிக் கடை நடத்தி வரும் வளையல்குமார், 40, என்பவருக்கும் இடையே, திருவிழா கடைகள் அமைப்பதில் தகராறு இருந்தது. நேற்று முன்தினம் மதியம், கிழக்குரத வீதி தேர் நிறுத்தம் அருகே, கந்தசாமியும், நாமக்கல் ஒப்பந்ததாரர் துரை, 50, என்பவரும் உட்கார்ந்திருந்தனர். அங்கு வந்த வளையல்குமார் வாக்குவாதம் செய்து, கந்தசாமியை வயிற்றிலும், துரையை, நெற்றியிலும் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். நேற்று மதியம், வளையல்குமார் மலை சுத்தி ரோட்டில் நடமாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற டவுன் போலீசார் வளையல்குமாரை கைது செய்து, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை, 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி வேலுமயில் உத்திரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை