நீதிமன்ற அறிவுரை மீறல்: ரூ. 3.3 கோடி கட்டடத்திற்கு பூமி பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீதிமன்ற அறிவுரை மீறல்: ரூ. 3.3 கோடி கட்டடத்திற்கு பூமி பூஜை

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: நீதிமன்ற அறிவுரையை மீறி, ராசிபுரத்தில், 3.3 கோடி ரூபாய் மதிப்பில், கல்லூரி கட்டடத்திற்கு பூமி பூஜை போடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரிக்கு, 3.3 கோடி ரூபாயில், கூடுதல் கட்டடம் கட்ட, 2017 டிச., 12ல், டெண்டர் விடப்பட்டது. கட்டடம் கட்ட சிங்களாந்தபுரத்தைச் சேர்ந்த, மா சடச்சியம்மன் கான்டிராக்ட் நிறுவனம் உள்ளிட்ட, மூன்று நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால், டெண்டரை திறக்காமலேயே, ஒரு நிறுவனத்திற்கு மட்டும் ஒப்பந்தம் செய்யும் முயற்சி தொடங்கியது. இதையடுத்து, மா சடச்சியம்மன் நிறுவனத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 'டெண்டர் யாருக்கு விடப்பட்டது; அது குறித்த தகவல்களை போட்டியாளர்களுக்கு தெரிவித்த பிறகுதான் கட்டடம் கட்டும் பணியை தொடங்க வேண்டும்' என, நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், இந்த வழக்கை இருவர் அமர்வுக்கு மாற்றியதாக தெரிகிறது. ஆனால், மற்ற போட்டியாளர்களுக்கு யாருக்கும் தெரிவிக்காமல் அவசரம், அவசரமாக நேற்று முன்தினம் கட்டடம் கட்டும் பணிக்கு பொதுப்பணித்துறையினர் அடிக்கல் நாட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.எல்.ஏ., சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனால், நாமக்கல் மாவட்ட பொதுப் பணித்துறை ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினர் அதிருப்தியடைந்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை