மின்விசிறி, குடிநீரின்றி விடைத்தாள் திருத்தும் மையம்; ஆசிரியர்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின்விசிறி, குடிநீரின்றி விடைத்தாள் திருத்தும் மையம்; ஆசிரியர்கள் அவதி

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: விடைத்தாள் திருத்தும் மையத்தில், குடிநீர், மின் விசிறி என, அடிப்படை வசதிகளை ஏற்படுத்த, கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கி, கடந்த, 6ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தும் பணி, கடந்த, 11ல், துவங்கியது. நாமக்கல் மாவட்டத்தில், ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என, இரண்டு மையங்களில், பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக, அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 1,000க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, தினமும், காலையில், 10, மாலையில், 10 என, 20 பேப்பர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், போதிய அடிப்படை வசதிகள் செய்துதரவில்லை என்றும், குறிப்பாக, குடிநீர், மின்விசிறி, கழிப்பிடத்துக்கு தேவையான தண்ணீர் போன்ற வசதிகள் கடமைக்கு செய்து தரப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. ஒரு நாள் மின் விசிறி இருந்தும், ஓடாத அறையில் ஆசிரியர்கள் அமர்ந்து விடைத்தாள் திருத்தியுளனர். நேற்று, மின் விசிறி இல்லாத அறையில், புழுக்கத்தில் அமர்ந்து, திருத்தியுள்ளனர். அதனால், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆசிரியர்களின் நிலையை கருத்தில் கொண்டு, மின்விசிறி, தண்ணீர் வசதி செய்து தர மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X