தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்காக, தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: வரும் ஜூனில் நடக்கவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனுடன், ஏற்கனவே தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகலை இணைத்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கணினி வெப் கேமரா மூலமாக புகைப்படம் எடுக்க, தேர்வுக் கட்டணம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும், 50 ரூபாய், முதலாண்டு மற்றும் இரண்டாமாண்டு மதிப்பெண் சான்றிதழ், 100 ரூபாய், பதிவு மற்றும் சேவைக்கட்டணம், 15 ரூபாய், ஒரு விண்ணப்பத்திற்கு ஆன் - லைன் பதிவுக் கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். வரும், 24 மாலை, 5:00 மணிவரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை