பதுக்கி வைத்திருந்த சிலைகள்: டி.எஸ்.பி., நேரில் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதுக்கி வைத்திருந்த சிலைகள்: டி.எஸ்.பி., நேரில் ஆய்வு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராசிபுரம்: ராசிபுரத்தில், பதுக்கி வைத்திருந்த சிலைகளை டி.எஸ்.பி., ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வி.நகரைச் சேர்ந்தவர் வின்சன்ட் சர்ச்சில். இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் உள்ளன. நேற்று முன்தினம், இவரது வீட்டிற்கு சென்ற மக்கள், அங்குள்ள அறையில், ஐந்தடி உயரத்தில் இரண்டு மரப்பெட்டிகள் இருந்ததை பார்த்தனர். அதில், நெல் கொட்டியிருந்ததால் சந்தேகமடைந்து, ஆய்வு செய்தபோது, 20க்கும் மேற்பட்ட கல்லால் ஆன சுவாமி சிலைகள் இருந்தது கண்டறியப்பட்டது. காலபைரவர், முருகர், விநாயகர் என, நான்கடி உயரத்திலிருந்து, ஒரு அடி உயரம் வரை விதவிதமாக சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேசமயம், வின்சென்ட் தலைமறைவானார். நேற்று, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., கருணாகரன் சிலைகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், ''கோவிலில் வைக்க செய்யப்பட்ட சிலைகள் போல் உள்ளன. ஆனால், நீண்ட ஆண்டுகளாக பதுக்கியுள்ளனர். வின்சென்ட்டை விசாரித்தால்தான் உண்மை தெரியவரும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை