விடைத்தாள் திருத்தும் பணி: 12 ஆசிரியர்கள் விடுவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விடைத்தாள் திருத்தும் பணி: 12 ஆசிரியர்கள் விடுவிப்பு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தொடர் போராட்டம் காரணமாக, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்படுவதால், 12 ஆசிரியர்களை அப்பணியில் இருந்து, முதன்மை கல்வி அலுவலர் உஷா விடுவித்து, உத்தரவிட்டார். தமிழகத்தில், பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்கி, கடந்த, 6ல், முடிந்தது. அதை தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும்பணி, கடந்த, 11ல், துவங்கியது. இந் நிலையில், 2009ல், ஜூன், 1க்கு பின் சேர்ந்த முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்குள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், விடைத்தாள் திருத்தும் மையங்களில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், தினமும் வழங்கப்படும், 20 விடைத்தாளில், 10 மட்டுமே திருத்தி விட்டு, மீதி, 10 விடைத்தாள்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வந்தனர். நாமக்கல், ரெட்டிப்பட்டி மையத்தில், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களிடம், முதன்மை கல்வி அலுவலர் உஷா, நேற்று பேச்சு நடத்தினார். அப்போது, 'விதிமுறைப்படி விடைத்தாள் திருத்த முடியாத ஆசிரியர்கள், பணியில் இருந்து விடுவித்துக் கொள்ளலாம்' என்றார். தொடர்ந்து, 12 ஆசிரியர்கள், தங்களை விடுவித்துக் கொள்வதாக தெரிவித்தனர். அதையேற்று, அவர்களை, அப்பணியில் இருந்து விடுவித்து உஷா உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை