ரூ.2000 நோட்டுகள் எங்கே? எங்கோ சதி!: ம.பி., முதல்வர் சந்தேகம்| Dinamalar

ரூ.2000 நோட்டுகள் எங்கே? எங்கோ சதி!: ம.பி., முதல்வர் சந்தேகம்

Added : ஏப் 17, 2018 | கருத்துகள் (109)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Shivraj Singh Chouhan,Rs.2000 Notes,ரூ.2000 நோட்டுகள்,ம.பி. முதல்வர்,சந்தேகம்

ஷாஜாபூர்: 'நாட்டில் புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எல்லாம் எங்கே போயின; ஏதோ சதி நடப்பதாக தோன்றுகிறது' என ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

ம.பி., மாநிலம் ஷாஜாபூரில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் கலந்து கொண்ட ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு முன் நாட்டில் ரூ.15 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்தது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை முடிந்தபின் புழக்கத்தில் இருந்தது ரூ.16.5 லட்சம் கோடியாக அதிகரித்தது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தற்போது எங்கும் பார்க்க முடிவதில்லை. பல ஏடிஎம்.,கள் பணம் இல்லாமல் பூட்டிக் கிடக்கின்றன.


பதுக்கியவர்கள் யார்?

புழக்கத்தில் பணம் இல்லாததால் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதில் ஏதோ சதி இருக்கிறது. ரூ.2000 நோட்டுகள் எல்லாம் எங்கே சென்றன. பணத்தை பதுக்கியவர்கள் யார்? அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி பணத்தட்டுப்பாட்டை போக்க முயற்சிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
18-ஏப்-201805:26:39 IST Report Abuse
Ramasami Venkatesan ரூ 2000 நோட்டுகள் எங்கே மறைந்தது. நம் நாட்டில் ஒரு வித செக்கூரிட்டியும் இல்லாமல் கோடி கணக்கில் கடன் கொடுக்க பாங்குகள் இருக்கும்போது, அதை புழக்கத்தில் விடும் பாங்குகளுக்கு பதுக்க சொல்லியா தரவேண்டும். ஒரு ஆட்சி செய்யும் சில நல்லவைகளை முறியடிப்பதையே லட்சியமாக கொண்ட எதிர் கட்சிகள் இருக்கும்போது எதுவும் சாத்தியமல்ல. எல்லா கொசுறு கட்சிகளையும் ஒழித்துவிட்டு இரண்டே இரண்டு பெரும் கட்சிகள் இருந்தால் போதும். டெமோகிராடிக் - ரிபப்லிக்கன் போல.
Rate this:
Share this comment
Cancel
Tamil - Madurai,இந்தியா
18-ஏப்-201801:50:43 IST Report Abuse
Tamil உங்க கர்நாடகா அமைச்சர் தன் மகளுக்கு சீதனமா கொடுத்து இருப்பார்
Rate this:
Share this comment
Cancel
Gopal.V. - bangalore,இந்தியா
17-ஏப்-201821:11:59 IST Report Abuse
Gopal.V. 2019 மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் 2019 மார்ச் மாத துவக்கத்தில் ரூபாய் 2000 செல்லாது என்று பிரதமர் அறிவித்து விடுவார். அப்பொழுது ரூபாய் 2000 த்தை பதுக்கியவர்கள் மாட்டிக்கொள்ளுவார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை