புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேதமான சாலையால் அவதி: கரூர் அருகே, கத்தாளப்பட்டியில், தார்ச்சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாகத் தான், அப்பகுதி மக்கள் திருச்சி நெடுஞ்சாலைக்கு செல்கின்றனர். ஆனால், சாலை போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால், இங்குள்ள மக்கள், உரிய நேரத்துக்கு எங்கும் செல்ல முடிவதில்லை. பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும்.

- கே. ரத்தினவேல், கத்தாளப்பட்டி.

தெரு நாய்களால் தீராத தொல்லை: கரூர் அருகே, கத்தாளப்பட்டியில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பலர், கரூர் வர்த்தக நிறுவனங்களில், தொழிற்சாலைகளில் பணி புரிகின்றனர். பணி முடிந்து இரவில் திரும்பும் மக்கள், அப்பகுதியில் சுற்றுத் திரியும் நாய்களால் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால், அப்பகுதி வழியாக, இரவில் இருசக்கர வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தெருவில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை.

- ஆர்.கொடியரசு, கத்தாளப்பட்டி.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை