இலவச தொழில் பயிற்சி மையம் துவக்க விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச தொழில் பயிற்சி மையம் துவக்க விழா

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் சைக்கோ அறக்கட்டளை வளாகத்தில், இலவச தொழில் பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது. இதில், டி.ஆர்.ஓ., சூர்யபிரகாஷ் பேசியதாவது: இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரின் நேர்மறையான அணுகுமுறை தான், நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும். பல்வேறு திறமைகள், ஆளுமைகள் உள்ள கிராமப்புற பெண்களுக்கு தொழில்ரீதியாக முன்னேற, உதவிக் கரம் நீட்ட வேண்டும். இந்தப் பயிற்சி மையத்தை பெண்கள் முறையாக பயன்படுத்தி, சிறந்த தொழில் முனைவோராக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், ஆர்.டி.ஓ., சரவணமூர்த்தி, தாசில்தார் சக்திவேல், சைக்கோ அறக்கட்டளை இயக்குனர் கிறிஸ்துராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை