சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டியது அவசியம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: காவிரி ஆற்றில், நீர்த்தேக்கக் கிணறு உள்ள இடத்தில், வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. வாங்கல் காவிரியாற்று பகுதியில், ஏராளமான சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. ஏற்கனவே காவிரியாறு தண்ணீர் இல்லாமல் பாலைவனம் போல காட்சியளிக்கிறது. இந்நிலையில், ஆற்றுப் பகுதியில் கருவேல மரங்கள் அதிகம் முளைத்துள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. நீர்த்தேக்க கிணறுகளில், போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், பல கிராமங்களில், போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்ய முடிவதில்லை. சீமைக் கருவேல மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை