குவாரியில் பணி கேட்டு மாயனூர் மக்கள் முற்றுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குவாரியில் பணி கேட்டு மாயனூர் மக்கள் முற்றுகை

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கிருஷ்ணராயபுரம்: மாயனூரில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியில், மணல் ஏற்றி வெளியே வரும் லாரியில், மணல் மட்டம் தட்டுவதற்கான பணி வழங்கக் கோரி, அப்பகுதி மக்கள், குவாரி முன், நேற்று காலை முற்றுகையிட்டனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, மாயனூர், சிந்தலவாடி பகுதியில், ஆற்றில் மணல் குவாரி அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, மாயனூர் கதவணை மேல்புறம் மணல் தேங்கியுள்ள இடத்தில், பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி லாரிகளில் ஏற்றி வந்து, மாயனூரில் உள்ள தனியார் நிலத்தில் கொட்டி வைக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு, மணல் விற்பனை செய்யும் பணி, நேற்று தொடங்கியது. காலை, 9:00 மணியளவில், லாரிகளில் மணல் அள்ளிச் செல்லும் பணி தொடங்கியது. இதில், மணல் லோடு ஏற்றும் போது, மட்டம் தட்டும் பணி வழங்க வேண்டும் என, லோடு ஏற்றும் மையம் முன், 50க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டனர். மாயனூர் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குவாரியில் வேலை வழங்குவது குறித்து, உயர் அதிகாரிக்களுக்கு மனு எழுதி தர வேண்டும் என, விளக்கிக் கூறினர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை