வங்கி செயலாளர் வீட்டில் இரண்டு பைக்குகள் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி செயலாளர் வீட்டில் இரண்டு பைக்குகள் திருட்டு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இரண்டு பைக்குகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். குளித்தலை அடுத்த, தோகைமலை வேதாச்சலபுரத்தை சேர்ந்தவர், கந்தர். இவர் பாதிரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளராக பணிபுரிகிறார். இவர் வீட்டின் ஒரு பகுதியில், டி.என்.பி.எல்., நிறுவனத்தில் பணி புரியும், தமிழ்செல்வன், ஜெகதீஷ் ஆகியோர் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இவர்கள் தங்களுடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், டி.வி.எஸ்., அப்பாச்சி ஆகிய இரண்டு இருசக்கர வாகனங்களை, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, அவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து, கந்தர் அளித்த புகாரின் படி, தோகைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை