உழவர் சந்தை அருகே இடையூறாய் நிற்கும் லாரிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தை அருகே இடையூறாய் நிற்கும் லாரிகள்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் உழவர் சந்தை அருகே, நிறுத்தப்படும் லாரிகளால், இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கரூர் நகரின் மையப்பகுதியில், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர் சந்தை செயல்படுகிறது. இச்சந்தைக்கு, கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டுமல்லாமல், நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு, திருச்சி முதலான பகுதிகளில் இருந்தும், விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உழவர் சந்தையை சுற்றி, 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், உழவர் சந்தை உள்ள திருச்சி சாலையில், வேன்கள், லாரிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. லாரிகள் மற்றும் வேன்களை வேறு இடத்தில் நிறுத்த கோரி, அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் பலன் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை