எட்டு மாதங்களுக்குப் பின் கரூர் மாவட்டத்தில் மணல் குவாரி திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எட்டு மாதங்களுக்குப் பின் கரூர் மாவட்டத்தில் மணல் குவாரி திறப்பு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: எட்டு மாதங்களுக்குப் பின், கரூர் மாவட்டம் மாயனூரில், மணல் குவாரி செயல்பட துவங்கியுள்ளது. கரூர், திருச்சி மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளை மூட, உச்சநீதி மன்றம் மதுரைக் கிளை, எட்டு மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. கடந்த, பிப்., 16ல், பொதுப்பணித்துறையின் மேல் முறையீட்டில், மணல் அள்ளும் இடத்தில், 'சிசி டிவி' கேமரா, சேமிப்பு கிடங்கு வரை செல்லும் மணல் லாரிகளில், ஜி.பி.எஸ்., கருவி, லாரி ஒன்றுக்கு, இரண்டு யூனிட் மணல் கொண்டு செல்ல அனுமதி உட்பட, பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் மணல் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, மாயனூரில் நேற்று முதல், மணல் குவாரி செயல்படத் துவங்கியது. இது குறித்து பொதுப்பணித்துறை (கனிமவளம் பாதுகாப்பு) உதவி பொறியாளர் சதீஷ் குமார் கூறியதாவது: காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு மேல் பகுதியில், இரண்டு கி.மீ., நீளம், 500 மீட்டர் அகலத்தில் மணல் திட்டு உள்ளது. இதை அகற்றும் வகையில் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. டெண்டர் முடியும் வரை, தற்காலிகமாக ஒப்பந்ததாரர் வைத்து மணல் அள்ளும் பணி நடக்கும். பொதுப் பணித்துறையின் மணல் மறு விற்பனை மையத்தில், ஒரு யுனிட் மணல், 1,330 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனில் பதிவு செய்யதவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை, மணல் மறு விற்பனை மையம் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை