முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் போராட்டம்

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கரூர்: முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவை கண்டித்து, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் அருகே, வெண்ணைமலை தனியார் பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. இதில், ஈடுபட்டுள்ள மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், கடந்த, 11ல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மூன்று நாட்கள் விடுமுறைக்குப் பின், நேற்று மீண்டும் விடைத்தாள் திருத்தம் பணி துவங்கியது. அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் மட்டுமே காத்திருப்பு போராட்டத்திற்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மற்ற இரண்டு சங்கங்கள் நோட்டீஸ் தராமல், போராட்டத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமாகும். மேலும், எத்தனை விடைத்தாள் திருந்தப் போகிறீர்களோ, அவற்றை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதை கண்டித்து, 150க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிசங்கர் கூறியதாவது: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். இதன்படி, நேற்று காலை வந்தவுடன், எத்தனை விடைத்தாள் திருத்த முடியும் என்பதை எழுதி தர வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார். அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்து, புறக்கணிப்பு போராட்டம் நடத்தினோம். தற்போது மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை வைத்து, விடைத்தாள் திருத்தம்பணியை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X