அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஏப் 17, 2018
Advertisement

பாதாள சாக்கடை மூடி வைக்கணும்: கரூர் நகராட்சி பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில், அடைப்பு ஏற்படும் பட்சத்தில், அதை சரி செய்யும் வகையில், சாலையில் திறப்பு அமைத்து, வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த திறப்புகள், கான்கிரீட் பலகை கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. குளத்துப்பாளையத்தில், பாதாள சாக்கடை கான்கிரீட் சிலாப் பலகை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனால், அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர்.
சாலையோரம் குப்பை எரிப்பு: வேலாயுதம்பாளையம் பகுதியில், குப்பை கொட்ட தொட்டி வைக்கப்படவில்லை. மக்கள் சாலையோரம் குப்பை கொட்டுகின்றனர். முறையாக அள்ளப்படாத இக்குப்பையில் சிலர் தீ வைத்து விடுகின்றனர். இதனால், சாலை நாள்தோறும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அவ்வழியாக வாகனங்களில் செல்லும் மக்கள், மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பஞ்சாயத்து நிர்வாகம் இதை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளது.

பராமரிப்பில்லாத தண்ணீர் தொட்டி: கரூர் அருகே, மட்டப்பாறையில், சில ஆண்டுகளுக்கு முன் தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அமராவதி ஆற்று நீர் மற்றும் ஆழ்துளை கிணற்று நீர், இந்த தொட்டியில் ஏற்றப்பட்டு, அப்பகுதி மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தரைமட்ட தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குழாய்களும் சேதமடைந்து, தண்ணீர் கசியும் நிலை ஏற்பட்டுள்ளது. தரைமட்ட தொட்டியை சீரமைக்க வேண்டும்.

உடைந்த குப்பை தொட்டியால் சிக்கல்: கரூர் அருகே, காந்திகிராமம் சேரன் நகரில், பொதுமக்கள், குப்பையை கொட்ட வசதியாக நகராட்சி சார்பில் இரும்பு தொட்டி வைக்கப்பட்டது. தற்போது, அந்த தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால், மக்கள் சாலையோரம் குப்பை கொட்டு கின்றனர். காற்று பலமாக அடிக்கும் போது, குப்பை சாலையில் பறக்கிறது. சாலையில் செல்ல முடியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். உடைந்த குப்பைத் தொட்டியை மாற்றி அமைக்க வேண்டும்.

சாக்கடை கால்வாய் தூர் வாரப்படுமா? கரூர், ரங்கநாயகிபுரத்தில், 350க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் செல்லும், சாக்கடை கால்வாய்களில், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய்களில், ஏராளமான முட்செடிகள் வளர்ந்துள்ளன. கற்கள், மண் குவிந்து தூர்ந்து போன நிலையில் உள்ளது. இதனால், கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் கால்வாய்களை நாள்தோறும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை