டயர் மாற்ற நின்ற வாகனம் மீது அரசு பஸ் மோதி விபத்து; தொழிலாளி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டயர் மாற்ற நின்ற வாகனம் மீது அரசு பஸ் மோதி விபத்து; தொழிலாளி பலி

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அடுத்த, ஆறுரோடு அருகே, டயர் மாற்றிக் கொண்டிருந்த வேன் மீது, அரசு பஸ் மோதி ஒருவர் பலியானார். சேலம் மாவட்டம், தாரமங்கலத்தைச் சேர்ந்த, சுரேஷ்குமார், 35, விமலன், 26, ரேகன், 25, ராஜ்குமார், 18 ஆகியோர், மதுரையில், விழா பந்தல் அமைக்கும் பணிக்கு சென்றுவிட்டு, டாடா 407 வாகனத்தில் ஊர் திரும்பினர். நேற்று அதிகாலை, 2:00 மணியளவில், வாகனத்தின் டயர் பஞ்சரானது. சாலையோரத்தில் நிறுத்தி, டயரை மாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக, கரூர் நோக்கிச் சென்ற அரசு பஸ், நின்றிருந்த வேன் பின் பகுதியில் மோதியது. இதில், சுரேஷ்குமார் அதே இடத்தில் பலியானார். மற்ற மூவர் படுகாயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துகுறித்து, அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X