தாலுகா வாரியாக குறைதீர் கூட்டம்; கலெக்டர் அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா வாரியாக குறைதீர் கூட்டம்; கலெக்டர் அறிவிப்பு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: ஆர்.டி.ஓ., - தாலுகா அலுவலகங்களில் திங்கள்தோறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் என, கலெக்டர் அன்பழகன் அறிவித்துள்ளார். கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்திருந்தனர். மேலும், வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, காவல்துறை நடவடிக்கை, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, மொத்தம், 230 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்தில், கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: கோடைகாலம் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள், பொதுமக்கள் பயண, கால, பண விரயங்களை தடுக்கும் வகையில், தாலுகா, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் திங்கட்கிழமைதோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படும். அங்கு, பெறப்படும் மனுக்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு நிகராக உடனடியாக பாரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சூர்யபிரகாஷ், தேசிய தகவல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை