மின் விளக்கு இல்லாத நொய்யல் பாலம்: மக்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மின் விளக்கு இல்லாத நொய்யல் பாலம்: மக்கள் அவதி

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: கரூர் அருகே, நொய்யல் ஆற்றுப்பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளகின்றனர். கரூர் - ஈரோடு சாலையில் உள்ள, 62 ஆண்டுகள் பழமையான நொய்யல் பாலத்தில் மின் விளக்கு வசதி இல்லை. பாலம் வழியாக இரவு நேரத்தில் செல்லும் மக்கள், வழிப்பறி சம்பவங்களால் அச்சத்துடன் செல்கின்றனர். பாலம் அடியில், கும்மிருட்டாக உள்ள ஆற்றுப் பகுதியில், சமூக விரோத செயல்கள் தாராளமாக நடக்கின்றன. பாலத்தில் மின்கம்பங்கள் அமைத்து, மின் விளக்கு வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை