மனு கொடுக்க காத்திருக்கும் மக்களுக்கு இருக்கை வசதி; கலெக்டர் ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனு கொடுக்க காத்திருக்கும் மக்களுக்கு இருக்கை வசதி; கலெக்டர் ஏற்பாடு

Added : ஏப் 17, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வரும் மனுதாரர்கள் உட்கார வசதியாக, கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டுள்ளன. கரூர், கலெக்டர் அலுவலகத்தில், வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில், சொந்த பிரச்னை, பொது பிரச்னை குறித்து, சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் மனு கொடுக்க வருகின்றனர். இதில் வயதானோர் வருகை குறிப்பிடத் தக்க அளவில் உள்ளது. கூட்டம் நடக்கும் அரங்கு முன், மக்கள் வரிசையாக நின்று, கலெக்டரிடம் மனு கொடுப்பர். இந்நிலையில் மனு கொடுக்க வரும் மக்கள் அமர இருக்கை வசதி இல்லை என்பதை அறிந்த கலெக்டர் அன்பழகன், நேற்று நடந்த கூட்டத்தில், அரங்கு முன் வரிசையாக பிளாஸ்டிக் சேர் போட உத்தரவிட்டார். குறைகளை அரிந்து நடவடிக்கை எடுக்கம் கலெக்டரை, மனு கொடுக்க வந்த மக்கள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை